"மட்டிடமுடியாத பேராசைக்கு, மகிந்த ராஜபக்ஷ சிறந்த உதாரணம்" அப்துர் றஹ்மான்
"நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியை இரண்டு முறை வகித்த ஜனாதிபதியொருவர், மீண்டும் ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்கு பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற அதிசயம் நமது நாட்டிலேதான் நடைபெற்றிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மட்டிட முடியாத பதவிப் பேராசைக்கு இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுவது ஒன்றே சிறந்த உதாரணமாகும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC-NFGG கூட்டணியில் 2ம் இலக்க வேட்பாளராக மரச் சின்னத்தில் போட்டியிடுபவருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
மேற்படி SLMC-NFGG அரசியல் கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி குட்வின் சந்தியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இக்கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த இந்த அறிமுகக் கூட்டத்தில் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் அப்துர் றஹ்மான், அங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,
"முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அவரது சகாக்களும் இந்த நாட்டைக் கொள்ளையடித்து, இனவாதத்தையும் மதவாதத்தையும் ஊக்கப்படுத்தி சர்வாதிகாரமாக ஆட்சி செய்த கொடூரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நல்லாட்சி நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பொது அணியாக நாம் அனைவரும் இணைந்து மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்ததன் மூலம் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.
ஆனால், நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வியடைந்த அவர் வீட்டில் ஓய்வு பெற்றுக் காலத்தைக் கழிக்க விரும்பாது, மீண்டும் ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் வந்து பின் கதவு வழியாகப் பிரதமராகி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் இப்போது தேர்தலில் போட்டியிடுகின்றார். அவரைப் பீடித்திருக்கின்ற பதவி அதிகாரப் பேராசை எப்படிப்பட்டது என்பது இதிலிருந்து அனைவருக்கும் நன்கு தெளிவாகியுள்ளது.
இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் முன்னெடுத்து வந்த 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்காமையினால்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களைத் தோல்வியடையச் செய்யும் நோக்குடன் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பொதுத் தேர்தலுக்கான மாபெரும் அரசியற் கூட்டணியொன்று 'நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி' என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டணியில் ஸ்ரீ.ல.மு.கா, அ.இ.ம.கா உள்ளிட்ட பல்வேறு அரசியற்கட்சிகளும் இணைந்திருக்கின்றன. அதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரான நாமும் இணைந்துள்ளோம்.
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணிகள் ஏற்படுத்தப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் பரஸ்பரம் விமர்சனங்களைத் தெரிவித்து வந்த அரசியல் கட்சிகள் தமது பொது எதிரியைத் தோற்கடிப்பதற்காக கூட்டணி சேர்ந்து செயற்பட்டு வெற்றி கண்டன.
கடந்த வட மாகாண சபைத் தேர்தலின்போது நாம் த.தே.கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துச் செயற்பட்டு தமிழ் - முஸ்லிம் உறவைப் பலப்படுத்தினோம். அதேபோல, ஊவா மாகாண சபைத் தேர்தலில் நாம் ஐ.தே.கட்சியுடன் கூட்டணி அமைத்துச் செயற்பட்டு சிங்கள – முஸ்லிம் உறவைப் பலப்படுத்தினோம்.
கருத்தியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் முரண்பட்டிருக்கும் அரசியற் கட்சிகளும், அரசியற் செயற்பாட்டளர்களும் தமது பொது இலக்கை அடைந்து கொள்வதற்காகவும் தேசிய நலனில் அக்கறை கொண்டும் தேர்தல் காலங்களில் இவ்வாறு கூட்டிணைவதென்பது வரலாறு நெடுகிலும் இடம்பெற்று வருகின்ற விடயமாகும்.
அந்த அடிப்படையில்தான் இந்தப் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்தாவது நாடாளுமன்ற ஆசனம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தரப்புக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்குடன் நாம் ஸ்ரீ.ல.மு.கா.வுடன் இணைந்து மரச்சின்னத்தில் போட்டியிடுகின்றோம். அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் நாமும், ஸ்ரீ.ல.மு.கா.வும் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
நாமும், ஸ்ரீ.ல.மு.கா.வும் தத்தமது தனித்துவங்களைப் பேணி புரிந்துணர்வு அடிப்படையில் ஒப்பந்தமொன்றைச் செய்து கொள்வதற்கும் உடன்பட்ட நிலையில்தான் நாம் இந்தத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதற்கு களமிறங்கியுள்ளோம் என்பதை இருதரப்பு ஆதரவாளர்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலே தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்காமல் மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவதற்கு இறுதி நேரம் வரை இந்த மாவட்டத்தில் செயற்பட்டவர்தான் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா. இப்போது அவர் தான் மைத்திரி அணியில்தான் போட்டியிடுவாமதாக சொல்கிறார். இது அப்பட்டமான பொய்யாகும்.
மகிந்த தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட ஹிஸ்புல்லா தொடர்ரந்தும் மகிந்தவின் விசுவாசியாகவே செயற்பட்டார். மைத்திரியினால் இமைக்கப்பட்ட அரசாங்கத்தை வீழ்துவதறகான சதித்திட்டத்திலும் கையெழுத்திட்டவர்தான் இவர். இப்போது மகிந்த ராஜபக்ஷவை அடுத்த நாடாளுமன்றத்தில் அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காகத்தான் இந்தத் தேர்தலிலே அவரும் போட்டியிடுகின்றார்.
ஒரு உண்மையான முஸ்லிமுக்கு மானம், ரோஷம், சுயகௌரவம் என்பதெல்லாம் சிறிதளவாயினும் இருக்க வேண்டும். ஆனால் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு இதுவெல்லாம் துளியளவும் கிடையாது. அவரது அரசியலின் மூலதனமே பொய்யாகும்.
அண்மையில்கூட, கடற்கரை மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று ஒரு பெரும் பொய்யை எமது மக்கள் மத்தியில் பகிரங்கமாகச் சொல்லி அரசியல் ஆதாயம் பெற முயன்றுள்ளார்.
உண்மையில் அவருக்கும், மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இப்போதும் மிக நெருக்கமான தொடர்புகள் இருப்பதை எம்மால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். அண்மையில் நாம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்கூட அவற்றை நான் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தேன்.
எனவே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின்போது எமது மாவட்ட முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மரச்சின்னத்திற்கு வாக்களித்து முஸ்லிம் சமூகத்தின் பெயரால் போலிகளும், பொய்யர்களும் நாடாளுமன்றத்திற்குச் செல்வதைத் தடுத்து, நல்லாட்சியொன்றை இந்த நாட்டிலும், மாவட்டத்திலும் ஏற்படுத்துவதற்கு ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னால் இதே மண்ணில் நாங்கள் முன்வைத்த நல்லாட்சிச் சிந்தனையானது, இன்று தேமசியளவில் அனைத்து அரசியல் தரப்பினராலும் அதிகளவில் பேசப்படுகின்ற, அமுலாக்கம் செய்ய ஆர்வங்காட்டப்படுகின்ற ஒரு விடயமாக மாறியிருப்பதைக் கண்டு நாம் பெருமைப்பட வேண்டும்.
அந்தப் பெருமையிலும் அன்று இந்த நல்லாட்சி அரசியல் சிந்தனைக்கு ஆதரவாக வாக்களித்து வளர்த்த இந்தக் காத்தான்குடி மக்களுக்கு முதன்மைப் பங்கிருப்பது வரலாறாகும் என்பதையும் இத்தருணத்தில் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.'' என தெரிவித்தார்.

Post a Comment