மஹிந்தவின் கனவு தகர்ந்தது - நீதிமன்றத்தை நாடிய மைத்திரிக்கு தற்காலிக ஆறுதல்
கட்சி தலைவரின் அனுமதியின்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ளது.
இந்த இடைக்கால தடை இன்று (15) மாலை விதிக்கப்பட்டது.
கட்சி தலைவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சுதந்திரக் கட்சியை கைப்பற்ற திட்டம் வகுத்திருந்த மஹிந்தவின் கனவு இதன்மூலம் தகர்க்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
சுதந்திரக் கட்சியை கைப்பற்ற திட்டம் வகுத்திருந்த மஹிந்தவின் கனவு இதன்மூலம் தகர்க்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் தேர்தலில் நடுநிலை வகிக்கப்போவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்தமையை அடுத்து கட்சி தலைவரான அவரின் இணக்கமில்லாமல் இன்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கட்சியின் செயலாளரும் மஹிந்தவின் தீவிர ஆதரவாளருமான அனுர பிரியதர்சன யாப்பை இதற்கான அழைப்பை விடுத்திருந்தார்.
இதனையடுத்து அந்த கூட்டம் ரத்துச்செய்யப்படவேண்டும் என்று ஜனாதிபதி பணித்திருந்தார்.
எனினும் அது மீறப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே நீதிமன்ற நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அப்படிப்போடு அரிவாளை!
ReplyDeleteGood
ReplyDeleteUse your executive power and chase those rogues
Power hunger for these morons
Don't allow
Regain your good name by future actions
நாம் முன்னர் கூறியது போல பொறுத்திருந்துதான் இந்த சதுரங்க விளையாட்டை வெளியில் இருந்து கொன்டு பார்க்க வேண்டும், இதுதான் உள்ளே இழுத்து பொறியில் வைத்து விளையாடும் விளையாட்டாகும், இப்போதுதான் இரவு பகல்தூக்கம் கலைந்துள்ளது
ReplyDelete