Header Ads



தேசிய காங்கிரசுடன் கை கோருங்கள், இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் - அதாஉல்லா

ஐக்கிய  மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  அம்பாறை  மாவட்டத்தில்  நான்கு  ஆசனங்களை  கைப்பற்றும். தேசிய   காங்கிரசின்  மூன்று பேரும்  பாராளுமன்றம்   செல்வது  உறுதி உறுதி..

 பொத்துவில் பொது அமைப்புக்களுடன்  நடை பெற்ற கலந்துரையாடலில்  உரையாற்றிய போது ...... முன்னாள்  அமைச்சர்  அதாஉல்லா .

 இம்முறை  பொதுத்தேர்தலில்  தேசிய  காங்கிரஸ்   சற்று  வித்தியாசமான  வியுகத்தை  வகுத்துள்ளது . கடந்த  கால  தேர்தல்களில்  தேசிய  காங்கிரஸ்  மூன்று தொகுதிகளுக்குமே  மூன்று  பேரை  நிறுத்தியது  அதில் வெற்றியும் கண்டது .

இம்முறை தேசிய  காங்கிரஸ்  எவராலும்  திரும்பிப்பார்க்காத  யாரும் எந்த  கட்ச்சியும்  அரசியல்  அதிகாரம்  வழங்க  முன்வராத இரண்டு  ஊர்களை   தேர்ந்தெடுத்திருக்கிறது .பொத்துவில்  மற்றும்  இறக்காமம் இவ்வளவு  காலமும்  இந்த இந்த  இரண்டு  ஊர்  மக்களினது  வாக்குகளை  சுவீகரித்தர்கள் தவிர   இவ்விரண்டு  ஊர்கலுக்கும்  அரசியல்  பிரதிநிதித்துவத்தை யாரும்  வழங்க  வில்லை .இவ்விரு  ஊர்  மக்களும்  மனச்சாட் சியில் கைகளை  வைத்து  சொல்லுங்கள்  யாரும் உங்களது  ஊர்களை  கவனித்து  அரசியல்  பிரதிநித்துவம்  வழங்கினார்களா  ?

எனவே  இறக்காமம்  மற்றும்  பொத்துவில் வாழ் என் உடன் பிறப்புகள்  சற்று  சிந்தியுங்கள் .நீங்கள் தொடர்ந்தும்  கருவேப்பிலையாகவே   பயன் படுத்தப்பட்டுல்லிர்கள்  அந்த  நிலை  மாற  வேண்டும்  அதற்காகவே  உங்களுக்கு  வேர்ப்பாலர்களை  கலமிரக்கியுள்ளேன் .தொடர்ந்தும்  நீங்கள்  அரசியலில்  அநாதையாக    இருக்க வேண்டாம் . அந்த யுகத்திற்கு  முற்றுப்புள்ளி  வைத்து  புது  யுகம்  படைப்போம் ....தேசிய காங்கிரசுடன்  கை  கோருங்கள்   இன்ஷா  அல்லாஹ்   வெற்றி  நிச்சயம் .

இன்று  தேசிய காங்கிரஸ்  புதிய  பாதையில்  புது  யுகம் நோக்கி  பயணித்து  வருகிறது .தேசிய  காங்கிரசுடன் கை கோருங்கள் . எமது  வெற்றி பாதையை  ஜீரணிக்க  முடியாத  சிலர்  பல பொய்  பிரச்சாரங் களில்  ஈடுபட்டுள்ளனர்  அவைகளை  நம்ப  வேண்டாம் . எனவும்  மேலும்  தெரிவித்தார் .

5 comments:

  1. மஹிந்தையே ஊரூராக சென்று பஸ்களில் ஆட்கள் ஏற்றி கூட்டம் நடத்துகிறார் போதாகுறைக்கு இவர் மஹிந்தைக்கு வாக்கு சேர்த்து வெற்றி பெறப்போராறு கடந்த காலங்களில் உடைக்கப்பட்ட பள்ளிவாசல்கள் கண்ணுக்கு தெரிய வில்லையா இன்று போதுபலசெனா பள்ளிகள் பற்றியும் மெட்ராசாபற்றியும் பேசுவது இவர் கண்ணுக்கும் காதுக்கும் எட்டவில்லையா உள்ளம் உண்டு உணர்வு இல்லை கண்கள் உண்டு பார்வை இல்லை செவிப்புலன் உண்டு கேட்க மாட்டார்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறானே இப்படிப்பட்டவர்களைத்தானோ கொண்ச்சமாவது உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயம் இருந்தால் மகிந்தவுக்கு வாக்கு போடா சொல்வார்களா. முஸ்லிமாகவே அன்றி மரணிக்க வேண்டாம் அன்குறான். முஸ்லிமின் எதிரியை ஆதரிப்பது அவர்களுக்கு உதவி செய்வது எல்லாம் பாவம்.நீங்கள் நன்மையான விடயங்களுக்கு ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள் தீமையான விடயங்களுக்கு உதவியாக இருக்க வேண்டாம் குரான் வசனம்.அப்போ நாம் இவ்வாறு பள்ளியை உடைக்கும் மஹிந்தைக்கு உதவி புரிவது அவர்களின் ஆட்ச்சியை வரவேண்டும் என்று உதவிபுரிவது எந்த விடயத்தில் சேரும் தயவு செய்து முட்டாள் தனமாக நரகில் விழாதீர்கள்.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது போல் இந்த இரண்டு ஊர் மக்களும் சரியாக சிந்திப்பார்களானால்....! தாங்களும் பாராளுமன்றம் செல்வதிலிருந்து
    சற்று ஓய்வெடடுக்க வேண்டி வரும், காரணம் இந்த ஊர்களில் கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வாக்குகளையும் சேர்த்துத்தான்
    தங்கள் அரசியல் வாழ்க்கை இதுவரை காலமும் ஓடிக்கொண்டிருக்கிறது,

    ReplyDelete
  3. iveruden kai koarppethetku mun iver yaruden irukkirar ene parungel, MR uden than innum iver irukkirar, janathipathi therthelilum MR uden than irunthar, ivai ellam averin suyanalem karuthiya anri muslim samukeththitkake alle, muslim kelai alikkr ninaththe ande MR ,,,,,, MAKKELA ! VILIPPUDEN IRUNGEL MUSLIM SAMUKETHTHIL ANPU VAIUNGEL , SAMUKETHTHIL ANPU VAITHEVERKELUKKU VAKKALI UNGEL ATHU YARAKE IRUNTHALUM SARIYE....

    ReplyDelete
  4. என் உடன் பிறப்புக்களே இம்முறை நாம் தோற்பதற்காக போட்டியிடவில்லை நிச்சயம் மகிந்த பின்னால் நிற்போம் நாம் தொப்பி பிறட்டி அல்ல.அதனால் மகிந்த பள்ளியை உடைத்தாலும் முஸ்லிம்களின் வியாபார ஸ்தலத்தை எரித்தாலும் கவலையில்லை நாம் மகிந்தவிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம் என்பதுதான் இந்த அதாவுல்லாவின் சுருக்கம்.மக்கள் விழிப்புடன் உள்ளார்கள்

    ReplyDelete
  5. உங்கள் வியூகம் ஒரு போதும் பிழைத்ததில்லை .அதனால்தான் நீங்கள் பாராளுமன்றில் இன்று இருக்கின்றீர்கள்,இன்று நீங்கள் இறக்காமத்திற்கும் ,பொத்துவிலுக்கும் திடீர் பாசத்தை பொழிவதன் ரகசியம் பரகசியமானது என்பது எல்லோருக்கும் தெரியும்.இதே தேர்தலை தொகுதிவாரியானதென்றால் இந்தப்பேச்சும் திடீர்பாசமும் வந்திருக்காது.
    அடுத்த தொகுதிவாரி பிரதிநிதித்துவத்தை காக்க நீங்கள் இப்பொழுதே ஏமாற்றுவித்தைகளை பூனுகின்றீர்கள்.உங்களை பலமுறை பாராளுமன்றம் அனுப்பிய மக்களுக்காக,சமூகத்திற்காக நீங்கள் செய்தது என்ன?
    பொத்துவிலின் கல்வி இழிநிலைக்கு தங்களினதும் உதுமான் அவர்களினதும் பங்கு மிக அதிகம்.?
    பொத்துவில் கலாச்சார அரங்கில் உங்கள்பெயர் எப்படி வந்தது?
    இறத்தல் படுகொலைகளில் உங்கள் வகிபாகம் என்ன?
    விவசாயம்,நீர்ப்பாசனம்,மீன்பிடி,தொழில்வாய்ப்புக்களில் இவ்விரு ஊருக்கும் உங்களாலும் உங்கள் ஏஜன்ட்டுகளாலும் கிடைத்ததென்ன?
    இன்றைய உங்கள் வியூகம் இருக்கட்டும் கடந்த மாகாணசபையில் ஏன் உங்களால் இவ்வாறான வியூகம் ஏன் வகுக்கப்படவில்லை?
    அப்பொழுது தேசியகாங்கிரஸாகவும் தேசியதலைவராகவும் இருந்த நீங்களும் உங்கள் கட்சியும் இன்று வாலைச்சுருட்டிக்கொண்டு கழியோடை காங்கிரஸாகிவிட்டதாகவே எடுக்கலாமா?

    ReplyDelete

Powered by Blogger.