தோல்வியை ஒப்புக்கொண்டதனால் ரணில் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினர் தேசிய அரசாங்கம் பற்றி பேசுகின்றனர் - மகிந்த
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க தான் தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருணாகல் கல்கமுவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வலுவான அரசாங்கத்தை ஏற்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு அன்று நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால், இன்று தேசிய அரசாங்கம் ஒன்று இல்லாமல் முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சி தற்போது வாயை திறந்தாலே தேசிய அரசாங்கம் பற்றியே பேசுகிறது. அது ஆச்சரியமான விடயம்.
தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டதன் காரணமாகவே ரணில் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினர் தேசிய அரசாங்கம் பற்றி பேசுகின்றனர்.
நாங்கள் தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை. இம்முறை மக்கள் எமக்கு 117 ஆசனங்களை பெற்று தருவார்கள் என்று நம்புகிறோம். தேசிய அரசாங்கம் அவசியமில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment