Header Ads



இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட்டில், நாட்டின் தேசிய கொடியை முஸ்லிம்கள் அவமதித்தனர் - ஞானசார

சூழ்ச்சியாளர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே நாம் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளோம் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளரும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை பொதுபல சேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டின் தலைவர் மற்றும் கட்சித் தலைவர்கள் அனைவருமே தங்களது பதவியினை தக்க வைத்துக் கொள்ளவே தேர்தலில் போட்டியிருகின்றனர். அவர்களுக்கு சிங்கள மக்களின் உரிமை குறித்து கவலைகள் இல்லை.

இந்நிலையில் சூழ்ச்சியாளர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே நாம் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.

நாட்டின் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் நடந்துகொண்டமையே ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கும் பொதுபல சேனாவுக்கும் தொடர்பு இருப்பதாக சில தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால் இவ்வாறான சூழ்ச்சியாளர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற எமது முயற்சியின் முதற்படியாக நாம் இந்த தேர்தலில் களமிறங்குகிறோம்.

இத் தேர்தலில் நாம் ஆட்சியை கைப்பற்றி, நாட்டின் பெயரையும் மாற்றி ஆட்சியமைப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.