கொள்ளையடிப்பதற்கு முயற்சிசெய்த இருவர், தாக்கப்பட்டு கொலை
பதுளை, வெலிமடை நகரத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வெலிமடையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில், கொள்ளையடிப்பதற்கு முயற்சி செய்த இருவர், புதன்கிழமை (15) இரவு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்தே இந்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அறுவர், பொலிஸாரினால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். -
Post a Comment