Header Ads



பாராளுமன்றத்திம், நீதிமன்றத்திலும் மகிந்தவை சந்திக்க ஆர்வமாக உள்ளேன் - அனுரகுமார

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகுவாராயின் தாமும் அதனை விரும்புவதாக ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அலுத்கம - பேருவளை நகரில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தாம் அரசியல் மேடைகளில் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில்  முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் சட்டத்தரணிகள் குழுவொன்று தமக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக தெரிவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான சில சட்டத்தரணிகள் குழு ஏனைய அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக அவர்களின் கருத்துக்கள் தொடர்பில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும்  உரையாற்றிய அவர்; " நானும் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றேன் மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும் என்று. அத்துடன், நாடாளுமன்றத்திலும் சந்திக்க வேண்டும், அரசியல் மேடைகளில் மாத்திரம் கருத்து வெளியிடுவதில் அர்த்தம் இல்லை. அவரை நாடாளுமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்க வேண்டும்" என்றார். 

No comments

Powered by Blogger.