Header Ads



குடியுரிமையை ரத்து செய்வேன் - மஹிந்தவிடமிருந்து வந்துள்ள எச்சரிக்கை

தேர்தல் சட்டங்களை மீறினால் குடியுரிமை ரத்து செய்யப்படும் என தோ்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் தேர்தலை நடாத்த ஒத்துழைப்பு வழங்காது, வேண்டுமென்றே தேர்தல் சட்டங்களை மீறினால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அவர்களின் குடியுரிமை ரத்து பறிக்கப்படும்.

1981ம் ஆண்டு 1ம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய வேட்பாளர்களுக்கு எதிராக இவ்வாறு தண்டனை விதிக்க முடியும்.

வாக்காளர்களை உபசரித்தல், அழுத்தங்களை பிரயோகித்தல், லஞ்சம் வழங்குதல், கள்ள வோட்டு போடுதல் போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது.

வாக்கு பெற்றுக் கொள்ளும் நோக்கில் வாக்காளர்களுக்கு வரப்பிரசாதங்களை வழங்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், குற்றம் இழைத்த நாள் முதல் ஏழு ஆண்டுகள் வரையில் குடியுரிமையை இழக்க நேரிடும்.

நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொண்டிருந்தால் நாடாளுமன்ற உறுப்புரிமையும் ரத்தாகும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கொழும்பு ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.