முஸ்லிமகளுக்கு எதிரான நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளனர் - முஜிபுர் ரஹ்மான்
நாட்டில்
பேரினவாதிகளுக்கு களமமைத்துக்கொடுத்த முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து இனவாத சக்திகளும் மீண்டும்
தலைதூக்கியுள்ளன.
இதனால்
பேரினவாதிகள் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை
மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர் என மத்திய கொழும்பு ஐக்கிய
தேசியக்கட்சி பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான
முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மருதானையில்
இடம்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனவரி
மாதம் 8 ஆம் திகதி நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்தினோம். இந்த
பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்ட nமாற்றத்தை சீர்குலைக்க
தோற்றுப்போன மஹிந்த அணியினர் மீண்டும் அரசிலில்
களமிறங்கியிருக்கின்றனர்
நாட்டில் எல்லோருக்கும் அரசியல் செய்யும் உரிமை இருக்கின்றது. மஹிந்த தராளமாக அரசியல் செய்யலாம். ஆனால்
அவர் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் செயற்பாடுகளை
மேற்கொண்டு வருகின்றார். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கடந்த
சில மாதங்களாக பேரினவாதிகளின் கொற்றங்கள் அடங்கியிருந்தன.
மஹிந்தவின் மீள் வருகை பேரினவாதிகளுக்கு தெம்பை
ஏற்படுத்தியிருக்கிறது.
அவர்கள்
தைரியமாக முஸ்லிமகளுக்கு எதிரான நடவடிக்கையை மீண்டும்
ஆரம்பித்துள்ளனர். மஹிந்தவின் வருகையோரு பேரினவாதத்தின்
வருகையும் அமைந்துள்ளது. இது நாட்டின் அமைதிக்கு பெரும் ஆபத்தாகும்.
நாட்டில்
இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தினால் தமிழர்களும்
சிங்களவர்களும் முஸ்லிம்களும் பெருமளவில் பாதிக்கப்ட்டுள்ளனர்.
பல உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்.
நாடு பல வருடங்கள் பின்னோக்கி சென்றுவிட்டது. இந்நிலையில் மற்றுமொரு போராட்டத்திற்கு மஹிந்த வழிவகுக்கின்றார்.
இதனை தடுக்க வேண்டுமானா பேரினவாத சக்திகளுக்கு இடமளித்து ஊக்குவிக்கும் மஹிந்த அணியினரை தோற்கடிக்கவேண்டும் என்றார்.
Post a Comment