"கட்சி அல்லது நிறம் எதுவாக இருந்தாலும், எங்கள் வாக்கு, ஒரு சிங்கள பெளத்தருக்கே...!
எதிர் வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் எனும் ஒரே நோக்கத்திற்காக இனவெறியை தூண்டும் வகையில் எதிர்க்கட்சியினர் செயற்படுகிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட படம் ஒன்றில் "கட்சி அல்லது நிறம் எதுவாக இருந்தாலும், எங்கள் வாக்கு, ஒரு சிங்கள பெளத்தருக்கே." என்ற வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளை ஒட்டுவதை பாரர்த்ததாக குறிப்பிட்டார். சுவரொட்டிகளுக்கு முன்னால் சில சிறுவர்கள் காணப்பட்டதால் அது யாருடையது என பார்க்க முடியவில்லை என கூறினார்.
"இவ்வாறான ஒரு சமூகம் உருவாவதிலிருந்து தவிர்ந்து கொள்ளவே நாம் போராடி வருகிறோம். இலங்கை மிக நீண்ட காலமாக இவ்வாறான இன வெறிச் செயற்பாட்டால் பல்வேறு தாக்கத்திற்கு உள்ளாகி இருந்தது. ஒரு நாடாக நாம் ஒரு உயர்ந்த கலாசாரத்தை பின்பற்றுவதன் மூலம் சிறந்த குடிமக்களாகலாம்" என ஹாஷிம் கூறினார்.
"இது போன்ற நடத்தைக்கு அரசியலில் அல்லது சமுதாயத்தில் இடம் வழங்கக் கூடாது" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் கபீர் ஹாசிம் ஐக்கிய தேசிய முன்னணியில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment