Header Ads



அவருக்கு நீரிழிவு நோயுள்ளது, எனக்கு இல்லை...!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் பிரசார நடவடிக்கைகளை குருநாகலில் இன்று ஆரம்பித்தார்.

மஹிந்த ராஜபக்ஸவின் பங்கேற்புடன் இன்று சில கூட்டங்கள் இடம்பெற்றன.

குருநாகல் – ரிதீகம மொரதிஹ பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

    எனக்கு 6 வருடங்கள் இருந்தன. எனினும், இரண்டு வருடங்களுக்கு முன் தேர்தலொன்றை நடத்தித் தவறிழைத்தேன். அவர்கள் ஹெம்பேகன் (Ham Bacon) சாப்பிடுகின்றனர். எனது உணவு தொடர்பிலேயே தற்போது பேசுகின்றனர். அவர் சாப்பிடுவதையே நான் சாப்பிடுவதாக கூறுகின்றார். நாமும் நன்றாக சாப்பிடுவோம். எனினும், குருக்கனையே சாப்பிட்டேன். குரக்கன் ரொட்டி சாப்பிடுவது சொக்லேட் சாப்பிட்டதைப் போன்று அல்ல. அவருக்கு நீரிழிவு நோயுள்ளது. எனக்கு இல்லை. ரணில் சாப்பிடும் உணவுகள் தொடர்பில் பேச வேண்டாம். குறைந்த பட்சம் மக்களுக்கு வழங்கக்கூடிய விடயங்கள் தொடர்பில் பேசுங்கள். கிராமத்திலுள்ளவர்களின் தேவையை கிராமத்திலுள்ளவர்களே அறிவார்கள். கொழும்பு 7இல் ​​ஹெம்பேகன் சாப்பிட்டவர்கள் அல்ல.

2 comments:

  1. All sl.sapptathu pothatha

    ReplyDelete
  2. Of course, let us do something for the poor masses this time.

    ReplyDelete

Powered by Blogger.