ஜனாதிபதி மைத்திரியை, கொலை செய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரஜா சக்தி அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அந்த அமைப்பினால் கடந்த தினத்தில் நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட, திரைப்பட இயக்குநர் தர்மசிறி பண்டாரநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அவர்கள் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியமானது. அது அவரின் இதயத்தில் இருந்து வந்தவை.
இந்த கருத்துகளுக்கு பின்னர் அவரை கொலை செய்வதற்காக ஏதுநிலைகள் காணப்படுகின்றன. மைத்திரிபால சிறிசேனவை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது. அதனை நாம் செய்தே ஆகவேண்டும் என தெரிவித்தார்.
Post a Comment