முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள், இலகுவாக வெற்றி பெறுவர் - தவம்
(எம்.ஏ.றமீஸ்)
இம்முறை எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி; பெற்றுக் கொள்ளும் அதிகப்படியான பாராளுமன்ற உறுப்புரிமைகளால் நமது முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தை மேலும் அவை வலுப்படுத்தும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போது அக்கரைப்பற்று பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநகர பிரதி மேயர் எம்.எம்.றிஸாம் தலைமையில் அந்நாராது இல்லத்தில் நடைபெற்றபோதே மாகாண சபை உறுப்பினர் தவம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவரும் மிக இலகுவாக வெற்றி பெறக்கூடிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இத்தேர்தல் மூலமாக நாம் பெறுகின்ற மூன்று உறுப்பினர்களுடன் அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு அதிகாரம் கிடைக்கவுள்ள நிலைமை தோன்றவுள்ளது.
அக்கரைப்பறுப் பிரதேசத்தினை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அநாதையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் தோற்கின்ற இடத்திலிருந்து நாம் வெல்லக் கூடிய வியூகத்தினை வகுத்து செயற்படுகின்றோம் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனது சுயநலத்திற்காக பிற ஊர்களுக்கும் அரசியல் அதிகாரம் வேண்டும் என்று சொல்லி வந்த கூற்றுக்கு நாம் உண்மைக்குண்மையாக செயல் வடிவம் கொடுக்கவுள்ளோம். இம்முறை முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கவுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையினை அக்கரைப்பற்றுக்கு எப்படிப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றி நாம் சிந்தித்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
கடந்த 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின்போது வேண்டுமென்றே அக்கரைப்பற்றை அநாதையாக்கி இங்கு எவரையும் நிறுத்தாமல் மாகாண சபை அதிகாரத்தினை வர விடாமல் பலி கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா. பாரிய வாக்கு வங்கியுள்ள அக்கரைப்பற்றில் ஏன் மாகாண சபை உறுப்பிரை களமிறக்க முடியாமல் போனது?
நாம் தற்போது பெற்றிருக்கும் அமைதியான சூழ்நிலையில் அரசியல் நகர்வுகளைக் கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடு எம் எல்லோருக்கும் உண்டு. பாராளுமன்றத் தேர்தல் மூலம் சிலரால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இழக்கப்படும் அதிகாரம் வேரொரு வடிவத்தில் அக்கரைப்பற்றுக்குக் கிட்டவுள்ளது என்றார்.
He was absconding from the last elections and people are trying to remember his face to vote.
ReplyDeleteVery sorry sir
ReplyDeleteஅதாவுல்லாவே எங்கள் தவம் என்ற சொன்ன நீங்களா அவரிடம் காழ்புணர்வுகொண்டு பேசுகிறீர்கள்? நம்பமுடியவில்லை! அதவுல்லாவினால்தானே அரங்கத்தில் ஏறினீர்கள், நல்லதாகவோ கெட்டதாகவோ உழைத்தீர்கள், மேடைகளில் பேசக் கற்றுக் கொண்டீர்கள், அடையாளமே இல்லாத உங்களுக்கு "லேபல்" போட்டாரே அதாஉல்லா. அதாவுல்லாஹ்வில் சில தவறுகள் உள்ளனதான் ஆனால் நீங்கள் சொல்லும் "அக்கரைப்பற்றை அநாதையாக்குவது" என்ற உங்கள் மனச்சாட்சியை கொன்றுவிட்டுச் சொல்லும் இந்த வார்த்தையை - அதாவுல்லாவின் எந்த எதிரியும் கூட நம்பமாட்டான்.
ReplyDeleteஅடுத்தது அமைதியான சூழ்நிலைகளைப் பற்றி எழுதுகிறீர்கள். முன்பு நாங்கள் vacation வரும்போதெல்லாம் அதிகமாகக் கேள்விப்படுவது பயப்படுவதும் உங்கள் சண்டித்தனத்திற்கும் உங்கள் அடியாட்களுக்கும்தான், இப்போது நல்லாட்சி வந்ததால் உங்கள் காடைத்தனங்களெல்லாம் எடுபடாது என்பதால், ஒரு நாளிலேயே புத்தராகி விட்டீர்கள். ஆகவே இந்தக் கேவல அரசியலை விட்டுவிட்டு அரசியலை அறமாகச் செய்ய முயற்சியுங்கள்.
நன்றி