Header Ads



கண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை, ரணில் விக்கிரமசிங்க என்னிடம் ஒப்படைத்துள்ளார் - ரவூப் ஹக்கீம்

பெரும்பான்மை சிங்கள மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு குறைந்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இறுதியாக வர்த்தக சம்மேளனம் மேற்கொண்ட கணிப்பீட்டின் படி இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் சகல இன மக்கள் மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதிக்கு  இன்னும் பாரிய சரிவு ஏற்படப் போவது திட்டவட்டமாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நேற்று உடுநுவர - பொல்வத்தக் கிராமத்தில் அலுவலகமொன்றைத் திறந்து வைத்தபோதே இந்த கருத்தை வெளியிட்டார்.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்ததைப் பொறுத்தவரை தமது நிலைப்பாட்டை கடுமையான எதிர்த்த அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன போன்றோரும் ஐக்கிய தேசிய முன்னணிக் கூட்டில் தங்களோடு இணைந்திருப்பது மிகவும் சாதகமானது என்றும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

கண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தம்மிடம் ஒப்படைத்திருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், ஒரு பலமான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியொன்று அமையப்போவதாக தெரிவித்தார்.

1 comment:

  1. MUSLIM SAMUKETHTHIN NALENUKKAKE POI KOORINAL PARAVAI ILLAI BUT UNGEL SUNALETHTHITKAKE POI KOORE VANDAM

    ReplyDelete

Powered by Blogger.