Header Ads



"ராஜபக்சவினர் மாறவில்லை" சம்பிக்க ரணவக்க

ராஜபக்சவினர் மாறவில்லை எனவும் புதிதாக ஆரம்பிக்க வேண்டியவர் புதியவராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச புதிய கோஷம் ஒன்றை முன்வைத்துள்ளார். நாட்டுக்கு உயிரூட்ட புதிதாக ஆரம்பியுங்கள் என்ற கோஷத்தை அவர் முன்வைத்துள்ளார்.

புதிதாக ஆரம்பிக்க புதியவர் ஒருவர் வேண்டும். எனினும் எந்த விடயமும் புதிதாகவில்லை. மகிந்த, பசில், நாமல் இந்த ராஜபக்சவினரில் எவரும் மாறவில்லை.

ஜே.ஆர். ஜெயவர்தன, பிரேமதாசவுக்கு தலைமைத்துவத்தை கொடுத்தார். அவர் பிரதமர் பதவியையோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையோ கோரவில்லை.

சந்திரிக்கா குமாரதுங்கவும் அப்படிதான். பின்னால் வந்து பிரதமர் பதவியை தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறும் கோரவில்லை.

ஆனால், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக,அரசாங்கத்தின் தலைவராக, அமைச்சரவையின் தலைவராக, முப்படைத் தளபதியாக பதவிகளை வகித்து விட்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக முயற்சித்து வருகிறார்.

இது தெளிவான அதிகாரப் பேராசை என்றே கூறவேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.