Header Ads



ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தம்புள்ள சுதந்திரக் கட்சி குழு தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஆற்றிய உரைக்கு இந்தக் கூட்டத்தில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்தக் கருத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமென கோரியுள்ளது.

யாபாகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவெற்றப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர் ஜனக பண்டார தென்னக்கோனின் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

தம்புள்ள பிரதேச சபையின் தலைவர் கே.ஜீ. சோமதிலக்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சியை பாதுகாக்க சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனக பண்டார தென்னக்கோன் இந்தக் கூட்டத்தின் போது உறுதியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.