Header Ads



"அரசியலையும் சமூகக் கடமையாக் கருதி, விருப்பதுடன் ஈடுபட இளைஞர்கள் முன்வரவேண்டும்" அப்துர் ரஹ்மான்

"அனர்த்தங்கள் அழிவுகள் நிகழ்கின்ற பொழுது, அதிலிருந்து மக்களை மீட்பதும் உதவுவதும் சமூகக்கடமை எனக்கருதி உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு முன்வருவதுபோல் அரசியலையும் சமூகக் கடமையாக் கருதி அதில் விருப்பதுடன் ஈடுபடுவதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும்" என பொறியலாளர் MM அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் - நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூட்டணியில் மரச் சின்னத்தில் 2ம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வில்,  இளைஞர் யுவதிகள் மத்தியில் உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"அனர்த்தங்களும் அழிவுகளும் ஏற்படுகின்ற பொழுது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவ வேண்டுமென்ற சமூகக்கடமை நமக்குள் பரிணமித்து, அந்த வேட்கையில் நாம் ஓடோடி உதவுவதைப்போல், அவலுத்துக்குள்ளாகியிருக்கும் நமது அரசியலிலிருந்து மக்களை விடுவித்து, முழுக்க முழுக்க மக்களுக்கு பிரயோசனமான அரசியலை செய்வதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும். இது சமூகக்கடமை என்பதையும் உணர வேண்டும்.

நமது சமூகத்திற்கு மத்தியில் அறிமுகமாகியுள்ள அரசியலும், அரசியல்வாதிகளும் அதனை சாக்கடையாக்கியுள்ளனர். அரசியல்வாதிகள் லஞ்சம், ஊழல், ஏமாற்று, மோசடி, கொலை, கொள்ளை, மது மற்றும் மார்க்க விரோத செயல்கள் நிறைந்த ஒரு துறையாக அரசியலை மாற்றியுள்ளனர். இந்நிலை மாறி அரசியலை மக்கள் விரும்பும் துறையாக மாற்ற வேண்டும்.

கடந்த பத்து வருடங்களாக நல்லாட்சியை நோக்கிய பயணத்தில் எமது உழைப்பிற்கு கிடைத்த வெற்றியே புதிய ஜனாதிபதியைக் கொண்டு வந்தமையாகும். அடுத்ததாக தற்பொழுது பாராளுமன்றத்தேர்தலில் முஸ்லிம்காங்கிரஸ்ஸுடன் இணைந்து நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம். இது நல்லாட்சிப்பயணத்தில் எமக்கு கிடைக்கவிருக்கும் பாரிய திருப்புமுனையாக இருக்கும் என கருதுகின்றோம்.இந்த நல்லாட்சிப்பயணத்தில் இளைஞர்கள் சமூக உணர்வோடு பங்கெடுக்க வேண்டுமா"

No comments

Powered by Blogger.