Header Ads



60 மாதங்களில் புதிய நாட்டை உருவாக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது (வீடியோ)

60 மாதங்களில் புதிய நாட்டை உருவாக்கும், பஞ்ச செயற்பாடுகள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனம்

ஐக்கிய தேசிய முன்னணியின் 60 மாதங்களில் புதிய நாட்டை உருவாக்கும் பஞ்ச செயற்பாடுகள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், விகாரமஹாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் வெளியிடப்பட்டது.

இந்த பஞ்ச செயற்பாடுகளில் பொருளாதார முன்னேற்றம், ஊழலை முற்றாக ஒழித்தல், சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடுகளை செய்தல், கல்வியை மேம்படுத்துதல் ஆகியன உள்ளடங்கியுள்ளன.

தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் மாதுளுவாவே சோபித தேரர் உட்பட மத தலைவர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்களிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதிகள் கையளிக்கப்பட்டன.

இத்தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் ராஜித சேனாரத்ன, தூய்மையான நாளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அத்துரலியே ரத்ன தேரர், மாதுளுவாவே சோபித தேரர்,

அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், அமைச்சர் ரோஸி சேனாநாயக்க, அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, அமைச்சர் ஜோன் அமரதுங்க,

அமைச்சர்களான, கரு ஜயசூரிய, அர்ஜூன ரணதுங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. வாக்களித்த மக்களுக்கு உறுதியளித்தபடி திட்டங்களை நிறைவேற்றினால் சரிதான்!

    ReplyDelete

Powered by Blogger.