கோழிகளை உண்பதற்காக வந்த முதலை பிடிபட்டது (படங்கள் இணைப்பு)
ஏறாவூர் எல்லை நகர் பிரதேச மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று பொதுமக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்து அடி நீளமுடைய இந்த முதலை தொடர்பாக ஏறாவூர் பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டதையடுத்து வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் அதனை எடுத்துச் சென்றனர். மக்கள் குடியிருப்புப் பகுதியில் கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளை உண்பதற்காக இந்த முதலை வந்திருக்கலாமென நம்பப்படுகிறது.
Post a Comment