முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை, இல்லாமல் ஆக்கும் துரோகத்தனம் - ஹரீஸ்
(எம்.ஏ.றமீஸ்)
இலங்கை முஸ்லிம்களின் இதயமாக வர்ணிக்கப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தில் இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களமிறங்குவது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை தோற்கடித்து பெரும்பான்மைச் சமூகத்தினரை பாராளுமன்றம் அனுப்புகின்ற கொந்தராத்து வேலை புரிவதற்காகவே என அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை தெரியப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு சாய்ந்தமருது சீ பிறிஸ் ஹோட்டலில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது. அக்கட்சியின் இச் செயற்பாடானது அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்கச் செய்து முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கும் துரோகத்தனத்தை காட்டுவதுடன், இம்மாவட்டத்தின் முஸ்லிம்களை அநாதையாக்கும் சதி நடவடிக்கையுமாகும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உண்மைக்குண்மையாக நடக்கும் கட்சியாக இருந்தால் வன்னி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும். அக்கட்சியின் தலைமை மட்டும் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக அவருடைய மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்றார். ஆனால் எமது அம்பாறை மாவட்டத்தில் வேண்டுமென்றே தனித்துப் போட்டியிட்டு பத்து வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதால் எமது முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்கலாம் என கனவு காண்கின்றார்கள். அவ்வாறான துரோகத்தனத்திற்கு எமது கட்சிக்காரர்கள் சாவு மணி அடிக்கக் காத்திருக்கின்றார்கள். என்றுமில்லாதவாறு இம்முறை எமது முஸ்லிம் சகோதரர்களும் பெருந்தொகையான சிங்கள சகோதரர்களும் எமக்கு வாக்களிக்கவுள்ளனர்.
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும். இம்மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நான்கு ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நிலைப்பாடு காணப்படுகின்றது. இவ்வாறு பெற்றுக் கொள்ளும் நான்கு ஆசனங்களில் மூன்றினை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்றுக் கொள்வது நிச்சயமாகும். அதற்கான வியூகங்களை எமது கட்சி வகுத்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வரவேண்டுமாக இருந்தால் அது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுபவர்களால் மட்டுமே முடியும். ஏனைய கட்சியினால் இந்நிலைப்பாட்டை எட்ட முடியாது. அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டாலும் அவர்களால் வெற்றி கொள்ள முடியாது. அக்கட்சியில் போட்டியிடும் பெரும்பான்மையினருக்கு அப் பிரதேச வாக்குகள் கூடுதலாக கிடைக்கவுள்ளதால் அக்கட்சியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா போன்றோரால் வெற்றி பெறுவதென்பது கேள்விக்குறியாகும்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகப் பெரும் பேரம் பேசும் சக்தியாக மாறவுள்ளது. அதன்போது அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மருதமுனை சுனாமி வீட்டுத் திட்டம் போன்றன உரியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதோடு, பொத்துவில் ஆலிம்நகர் போன்ற பிரதேசங்களின் நிலப்பிரச்சினை போன்றவற்றை தீர்ப்பதற்கும், சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை ஏற்படுத்தல், கரையோர மாவட்ட செயற்பாடு போன்றவற்றை அமுல்படுத்வுள்ளோம்.
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு இம்முறை தேசியப் பட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அயற்கிராம அரசியல்வாதிகள் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கயஸ்தர்கள் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
எமது முஸ்லிம் மக்கள் விரும்புகின்ற மஹிந்த ராஜபக்ஷ அல்லாத ஆட்சியினை ஏற்படுத்துவதற்காகவே நாம் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றோம். தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சிகும் சுதந்திரக் கட்சிக்கும் நடக்கும் பலத்த போட்டியினைப்போல் அம்பாறையிலும் இருக்கும் என்ற காரணத்தினாலே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைத் தோற்கடிப்பதற்காகவே நாம் தனித்துப் போட்டியிடாமல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றோம் என்றார்.

ரிஷாத் பதுர்தீன் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு பல சேவைகளை செய்து இருக்கிறார் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தான் இருக்கிறார் ஆனால் தற்போது அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டி இடுவது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும்.இது ஒரு சமுதாய அநியாயம்.இதைப்பற்றி அவர் தேர்தலின் பின்னர் உணர்ந்து கொள்வதோடு அவராகவே மனவேதனை அடைவார்.
ReplyDeleteஇந்த ரிசாத் பதுர்தீன் போடும் ஆட்டம், ராஜபக்சவும், பிரபாகரனும் போட்ட ஆட்டத்தை விட பயங்கரமானதாகவே நாம் கருதுகிறோம். பணம், பட்டம், பதவிக்காகவே சில எட்டப்பர்கள் துணை போய் உள்ளார்கள். நிட்சயமாக முஸ்லிம் புத்தி ஜீவிகளும், பல்கலை கழக மாணவர்களும், சமுதாய பற்றுள்ள இளைஞர்களும் இந்த எட்டப்பர்களுக்கு சரியான பாடம் படிப்பிப்பார்கள். தம்பி ஹரீஸ் அவர்களே இவர்களுக்கு உறுதுணையாகவும் வழிநடத்தியும் நீங்கள் கூரிய இலக்கை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ReplyDeleteSLMC come or not it does not make any difference to SL Muslim community.
ReplyDeleteநான் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவூகளுக்கு மாறாக இதுவரை வாக்களித்தது கிடையாது என்றாலும் அண்மைக்காலமாக சற்று குழப்பமாக இருக்கின்றது ரிஸாட் மார்க்க ரீதியில் நல்லவர் சமுகத்திற்கு உதவியூம் செய்துள்ளார் வடக்கு மக்களுக்காக பாடுபடுகின்றார் அது இன்றைய முஸ்லீம்களின் தேவையூம் கூட ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் நிலை வெறும் பூச்சியம் இருந்து தேசிய காங்கிரஸ் எடுத்துள்ள நிலை முஸ்லிம்களுக்கு பாதிப்பு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இவ்வாறான விடயங்களில் உலமா சபை தலையிடுவது நல்லது. மற்றும் வன்னியில் ரிஸாதை வீழ்த்த ககீமும் பாருக்கும் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுவதும் வடக்கு மக்களை அனைதைகளாக்கும் இதை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா? எமது பகுதி எம்பி மேலே சொல்வதில் உண்மை உள்ளது எனினும் இவரது பேச்சுக்கள் தமிழில் அதுவூம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தான் இவர்கள்தான் ரங்காவூக்கு பொல்லுக் கொடுத்து அதனால் சமுகத்திற்கு அடிவாங்கிக் கொடுத்தவர்கள் சமுகத்திற்கு எம்பி தேவை அவர்கள் வாக்களிப்பில் கை உயர்த்த மாத்திரம் தான் என்றால் அதைவிட ஓர் ரோபைவை வைத்தால் அது இவர்களை விட சிறப்பாகச் செய்யூம் கடந்த தேர்தல்களில் சாராயம் லஞ்சம் கொடுத்துத்தான் எலக்சன் செய்தார்கள் இதுவூம் மாற்றப்படல் வேண்டும்
ReplyDelete