Header Ads



மஹிந்தவிற்கு பிரதமர் பதவி வழங்காவிட்டால், மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் பதவி வழங்காவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும். 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டினால் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும்.

மஹிந்தவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

நான் ஓர் சட்டத்தரணி. எமக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று.  19ம் திருத்தச் சட்டத்திலும் பெரும்பான்மை பலமுடையவர் பிரதமராக நியமிக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 113 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டால் நிச்சயமாக மஹிந்த ராஜபக்சவே பிரதமராக நியமிக்கப்படுவார்.  மஹிந்த பிரதமராவதனை எவராலும் தடுக்க முடியாது என டிலான் பெரேரா ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. அடக்கி வாசியும்... வருகின்ற பாராளு மன்றத்தில், பிரதமர் ரணிலின் அமைச்சரவையில் அமைச்சர் பதவி வேண்டும் என்றால்.

    ReplyDelete
  2. Mr. Dilan are you lawyer or liar, if you win and owned 113 seats “pls note the point” Mahintha can come into parliament, However, at the capacity of the president this country and as per constitution “pls note the point” M3 will appoint the prime minister. Don’t talk like thugs. people knows very well why you all are willing to win MR. You guys (who involved in corruption and drug Mafia) want to escape by Mahintha’s influence.

    ReplyDelete
  3. அதுசரி! இவரைப் பதவிக்கு கொண்டு வருவதற்காகவா ஜனவரி 8ல் மக்கள் 62 இலட்சம் மக்கள் வாக்களித்தார்கள்..?

    ReplyDelete

Powered by Blogger.