Header Ads



"9 மாதங்களில் பார்த்துக்கொள்ளுங்கள்"

சில தினங்களுக்கு முன் திருமண பந்தத்தில் ஈடுபட்ட மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தொடர்பில் வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு ஹிருணிக்கா கருத்து தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததாவது,

திருமணத்துக்கு முன்னரே தான் கர்ப்பம் தரித்ததாக சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். அவ்வாறு கூறுபவர்கள், இன்னும் ஒன்பது மாதங்களில் உண்மையை அறிந்துகொள்வார்கள்.

இவ்வாறு தெரிவித்தவர்களுக்கு நான் ஒரே ஒரு விடயத்தை மாத்திரமே சொல்ல விரும்புகின்றேன். ஒன்பது மாதங்களில் பார்த்துக்கொள்ளுங்கள் எது உண்மை என்று.

ஹிரான் என்னுடைய மூன்றாவது காதலன். என் தந்தையைப் போல் என்னைப் பார்த்துக்கொள்ளும் ஒருவரையே நான் இதுவரை காலமும் தேடிக்கொண்டிருந்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது.

எங்களுடைய திருமண வாழ்க்கையை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

தனது திருமண வாழ்வில், ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்

2 comments:

  1. திருமணமான தம்பதிகளின் அந்தரங்க வாழ்வு விடயங்களில் தலையிடும் உரிமையை யார் இவர்களுக்கெல்லாம் வழங்கினார்கள்..?

    இப்படியே போனால் இயற்கை உபாதைக்கு கூட யாரும் நிம்மதியாக செல்ல முடியாத நிலை ஏற்படும்.

    ReplyDelete
  2. Is this worthy of news for JM and its readers? Please try to maintain some degree of standards.

    ReplyDelete

Powered by Blogger.