தேசிய காங்கிரஸ் இம்முறை, தேர்தலின்போது 4 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் - அதாஉல்லா
(எம்.ஏ.றமீஸ்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் வாக்குகளை சின்னாபின்னமாக்கி ரவூப் ஹக்கீமுக்கு வேட்டு வைப்பதற்காக ரிஷாத் பதியுதீன் முயற்சிக்கின்றார். இம்மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்களை வேண்டுமென்றே களமிறக்கி முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய அவர் எத்தனிக்கின்றார் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட இப்தார் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (14) அக்கரைப்பற்று பொதுப் பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வன்னி மாவட்டத்தில் ரிஷாட் பதியுதீனுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அங்குள்ள பிரச்சினைகளை நிவர்த்திக்க முயற்சிக்காமல் அரசியல் இலாபங்களுக்காக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்கச் செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் யார் வந்தாலும் எது எவ்வாறு நடந்தாலும் எமது தேசிய காங்கிரஸ் கட்சி இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது நான்கு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு அளிக்கப்பட்ட ஒரு இலட்சத்து இருபதாயிரம் வாக்குகள் அப்படியே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக நமது மக்கள் தேசிய காங்கிரஸ் பக்கம் இருக்கின்றார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் அரசியல் அதிகாரமற்றுக் காணப்படும் கிராமங்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் எமது தேசிய காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் பல்வேறான முயற்சிகளில் ஈடுபட்டு அரசியல் அதிகாரங்களை வழங்கியிருக்கின்றது. நாங்கள் பல்வேறான வியூகங்களை வகுத்து செயற்பட்டபோது சில கிராமத்தவர்கள் நாங்கள் எதிர்பார்ததைப்போல் வாக்களிக்காமல் செயற்பட்டதனால் அவர்கள் தலைகளில் அவர்களாக மண்ணை வாரிப்போட்ட நிலை ஏற்பட்டது.
இம்முறை முஸ்லிம்களின் இதயம் என வர்ணிக்கப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தில் பல கட்சிகள் பல்வேறு வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன. அதைப்பற்றி எவ்விதப் பிரச்சினையும் எமக்கில்லை. அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் எமது வேலைத்திட்டத்தின் வரிசையில் மிகக் கவனமாக நகர்த்தல்களைச் செய்து மூன்று பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வகையில் நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் நீண்ட காலமாக எல்லோராலும் ஏமாற்றப்பட்டு வரும் பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய கிராமங்களிலிருந்து எம்மவர்கள் இருவரை தேர்தலுக்காக தேசிய காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. அவர்களுக்கு இதய சுத்தியுடன் மக்கள் வாக்களித்து எமது இலக்கினை அடைந்து கொள்ள வழிசமைக்க வேண்டும்.
எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து எமது அரசியல் பயணம் தோல்வி கண்டதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தோல்வியுற்றதாக சிலர் எண்ணியிருக்கின்றார்கள். நாங்கள் தோற்றுவிட்டோம் என்ற மாயை தோன்றினாலும் நாங்கள் தோற்றுப் போகவில்லை. நாங்கள் இருந்த இடத்திலேயே இருக்கின்றோம். எமது தலைவராக மைத்திரிபால சிறிசேன மாறியிருக்கின்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் எப்போது மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் கொண்டுபோய்ச் சேர்த்தாரே அப்போது முதல் அவர் வழியில் நின்று செயற்பட்டு வருகின்றேன். அப்போது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை ஜனாதிபதியாக்குவதற்காக உழைத்தோம். அதனைத் தொடர்ந்து இக் கூட்டமைப்பின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தலைவரானார். மஹிந்தவை இரண்டு முறை தலைவராக்குவதற்கு நாம் உழைத்தோம். மஹிந்த ராஜபக்ஷ நமது மக்களுக்குச் செய்த உதவிக்காக நன்றிக்கடனுடன் செயற்படவேண்டி ஏற்பட்டது என்றார்.

மரைந்த தலைவர் சேர்தார் என்பதையும் அவர்வழியும் பின்பற்ரும் தலைவா நீங்கள் குட்டி தலைவராக மாரிய மாயம்தான் என்னவோ?
ReplyDeleteEven during the asraf period also we didn't get 4 MPIES. So I think you are going to make some artificial mpies
ReplyDeleteஅதாவுல்லா கனவு காண்கிறார்
ReplyDeleteகனவு கான வேண்டாம்.
ReplyDeleteஉங்களுக்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்கலாம்...!
கனவு கான வேண்டாம்
ReplyDeleteanru Muslim makkelukku thurokem/aniyanem seithe Mahinde vai muslim makkel 100%nirakariththarkel anal inde Athaulla aver suya naleththitku Mahidevai atheriththar,meendum ande Mahide vai e atherikkirar karenem aresiyal anathai akivittethal makkela......vilippuden.
ReplyDeleteKanavukale kanavukale kalamellam vareeroo
ReplyDelete