மகிந்தவின் கூட்டத்திற்கு, மக்களை அழைத்துச்செல்ல 250 பேருந்துகள்
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வெளி பிரதேசங்களில் இருந்து மக்களை அழைத்துச் செல்ல 250க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் பயன் படுத்தப்பட்டதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஹோமாகம, கொட்டாவ பிரதேசங்களில் 30 பேருந்துகளில் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக பெருமளவிலான மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பதை காட்டுவதற்காக வெளியிடங்களில் இருந்து மக்களை அழைத்துச் சென்றதை உறுதிப்படுத்தும் காணொளிகள் எம்மிடம் உள்ளன.
பெரும்பாலான மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஆட்சியில் உள்ளது. அந்த மாகாண சபைகளுக்கு சொந்தமான அரச வளங்களையும் தனியார் பேருந்துகளையும் அவசியமற்ற முறையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தேர்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பான எமது சங்கம் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையாளரிடம் எழுத்துமூலமான முறைப்பாட்டை செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு பேருந்துகளை பணத்திற்காக வழங்குவதால் அதில் சிக்கல் இல்லை. எனினும் சில மாகாண சபை உறுப்பினர்கள் பலவந்தமான முறையில் தனியார் பேருந்துகளை தேர்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர் எனவும் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.

முழு அதிகாரத்திலிருந்தபோது செய்த அதே (பஸ்-சோற்றுப்பார்சல்) பழைய பாணியை இப்போதும் கடைப்பிடித்துப் பார்க்கின்றார்கள். அப்பொழுதே கைதராத உத்தி இப்போது மட்டும் உதவிடவா போகின்றது...?
ReplyDelete