1,370 ஆண்டுகள் பழைமையான, அல்குர்ஆனின் பாகங்கள் பிரிட்டனில் கண்டுபிடிப்பு
மிகப்பழைமையான புனித அல் குர்ஆனின் பாகங்கள் பிரிட்டனின் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குர்ஆன் கையெழுத்துப்பிரதி குறைந்தது 1,370 ஆண்டுகள் பழைமையானது என்று ரேடியோகார்பன் காலக்கணிப்பு முறைமூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மிக ஆரம்பகால குர்ஆன் பிரதிகளில் ஒன்றாக இது இடம்பிடித்துள்ளது.
முஸ்லிம்களின் இந்த புனித நூலின் பாகங்கள் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக நூலகத்தில் யாராலும் அடையாளம் காணப்படாத நிலையில் சுமார் கடந்த ஒரு நூற்றாண்டாக இருந்து வந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பு முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் 'அற்புதமான கண்டுபிடிப்பு" என்று பிரிட்டன் நூலகங் கள் தொடர்பான நிபுணரான கலாநிதி முஹமது இஸா வலி குறிப்பிட்டார். இந்த கையெழுத்துப் பிரதி, நூலகத்தின் மத்திய கிழக்கு புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் சேமிக்கப்பட்ட பகுதியில் உலகின் மிகப் பழைமையான அல் குர்ஆன் பிரதிகளில் ஒன்று என அடையாளம் காணப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் இளநிலை ஆராய்ச்சியாளர்களின் அவதானத்தை பெற்ற கையெழுத்துப் பிரதி மேலதிக ஆய்வுக்காக ரேடியோகார்பன் காலக்கணிப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அதன் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோதனையை மேற்கொண்ட ஆய் வாளர்கள் இந்த பிரதி இத்தனை பழைமையானது என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை என பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக விசேட தொகுப்புகளுக்கான இயக்குனர் சுசான் வொர்ரல் குறிப்பிடுகிறார்.
'குர்ஆனின் மிகப் பழைமையான பாகம் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது முழு உலகத்திற்கு பரபரப்பையும் வியப் பையும் ஏற்படுத்தும் விடயமாகும்" என்றும் அவர் குறிபபிட்டார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ரேடியோகார்பன் பிரிவிலேயே இந்த குர்ஆன் பிரதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆடு அல்லது செம்மறி ஆட்டு தோலில் எழுதப்பட்டிருக்கும் பாகங்கள் தற்போதுவரை இருக்கும் மிகப்பழைமையான குர்ஆன் பாகங்களில் ஒன்று என்பது உறுதியாகியுள்ளது.
இந்த ரேடியோகார்பன் சோதனை மூலம் குறித்த குர்ஆன் பாகத்தின் திகதி ஒரு எல்லை வரம்பில் கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த குர்ஆன் பாகங்கள் கி.பி. 568 முதல் 645 ஆம் ஆண்டு காலத்தை கொண்டது என்பது 95 வீதத்திற்கும் அதிகம் உறுதியாகியுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இரு பக்க காகிதத்தோலில் 18 முதல் 20 அத்தியாயங்கள் அல்லது சூராக்கள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் கட்பரி ஆய்வு நூலகத்தில் இருந்த இந்த பிரதி தவறான முறையில் அதேபோன்ற மற்றொரு குர்ஆன் பிரதியுடன் இணைத்து கட்டப்பட்டிருந் துள்ளது.
ஆனால் இந்த கையெழுத்துப் பிரதி இணைக்கப்பட்டிருந்த ஏனைய பிரதிகள் குறிப்பிடத்தக்க அளவு பழைமையானவையல்ல. இந்த காரணத்தினாலேயே குறித்த குர்ஆன் பாகம் அவதானத்தை பெற தவறியுள்ளது.
'இஸ்லாம் பிறந்த ஒருசில ஆண்டு காலத்திற்கு இந்த குர்ஆன் பாகம் எம்மை அழைத்துச் செல்கிறது" என்று கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பற்றிய பல்கலைக்கழக விரிவுரையாளரான டேவிட் தோமஸ் குறிப்பிட்டுள்ளார். 'இஸ்லாமிய வரலாற்றின்படி இறைத்தூதர் முஹமது (நபி)க்கு இறைத்தூது கிடைத்தது கி.பி. 610 தொடக்கம் அவர் மரணமடைந்த 632 ஆம் ஆண்டு வரையாகும்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதன்படி கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் அல் குர்ஆன் பிரதியை எழுதியவர் முஹ மது நபி உயிரோடு இருக்கும் காலத்தில் வாழ்ந்திருக்க சாத்தியம் உள்ளதாகவும் டேவிட் தோமஸ் குறிப்பிட்டார்.
'இறைதூதர் முஹமது (நபி)யை நன்றாக தெரிந்த ஒருவரே இதனை எழுதியிருக்க முடியும். பெரும்பாலும் அவர் இறைதூதரை பார்த்திருக்கக்கூடும் அவரது போத னைகளை கேட்டிருக்கக்கூடும்.
தனிப்பட்ட முறையில் இறைதூதரை தெரிந்திருக்கக் கூடும். இவ்வாறு இதனோடு பலவிடயங்களும் இணைந் திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆரம்பகாலத்தில் குர்ஆனின் வசனங்கள் காகித தோல், கல், பனைஓலைகள், ஒட்டக எலும்பில் எழுதப் பட்டு வந்தது. இவைகள் ஒன்று சேர்க்கப்பட்டு கி.பி. 650 ஆம் ஆண்டளவில் நூல் வடிவில் பு+ர்த்தி செய்யப்பட்டது.
'காகிதத்தோலில் எழுதப்பட்டிருக்கும் இந்த குர்ஆன் பாகம் இறைதூதரின் மரணத்திற்கு பின்னர் இரண்டு தசாப்தத்திற்கும் குறைவான காலத்தை கொண்டது என்பதை உறுதியாக கணிக்க முடியும்" என்று விரிவுரை யாளர் தோமஸ் குறிப்பிட்டார்.
'இந்த குர்ஆன் பாகம் இன்று ஓதப்படும் முறையிலான குர்ஆனுக்கு மிக நெருங்கியதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அதிலிருக்கும் குர்ஆன் வசனங்கள் அது இறக்கப்பட்ட நெருங்கிய காலத்தில் எழுதப்பட் டவை என்ற முடிவுக்கு வரமுடியும்" என்றும் அவர் கூறினார்.
கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கையெழுத்துப் பிரதி ஆரம்பகால அரபு எழுத்து முறையான ஹிஜhஸி முறையில் அமைந்துள்ளது. இதன் மூலம் இந்த குர்ஆன் பிரதி பழைமையானது என்பதை கண்டறிய முடி யும்.
ரேடியோகார்பன் சோதனை முறையைக் கொண்டு சாத்தியமான காலத்தையே கணிக்க முடியும். எனினும் பெர் மிங்ஹாம் பல்கலைக்கழ கத்தால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் குர்ஆன் பாகத்தின் சாத்தியமான காலமாக கி.பி. 645 ஆம் ஆண்டு கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது உலகின் மிகப்பழைமை யான குர்ஆன் பாகமாக இருக்கும் சாத்தியமும் அதிக மாக உள்ளது.
பிரிட்டன் நூலகத்தின் கையெழுத்து பிரதிகளுக்கு பொறுப்பானவரான காலாநிதி வோலி குறிப்பிடும்போது, 'இந்த பாகங்கள் அழகானதும் அதிர்ச்சிதரக் கூடியது மான தெளிவான ஹஜhஸி கையெழுத்து பிரதியாகும். இது பெரும்பாலும் முதல் மூன்று கலீபாக்களுடைய காலத்தினதாகும்" என்றார்.
முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களான முதல் மூன்று கலீபாக்களினதும் காலம் 632 இல் இருந்து 656 ஆகும். மூன்றாவது கலீபாவான உஸ்மான் இப்னு அப்பானின் காலத்திலேயே குர்ஆன் தொகுக்கப்பட்டு விநியோகிக்கப் பட்டது.
'காகிதத்தோல் கொண்டு முழு குர்ஆனையும் எழுதும் அளவுக்கு பல தசாப்தங்களுக்கு ஆரம்பகால முஸ்லிம் சமூகம் போதுமான செல்வத்தை பெற்றிருக்கவில்லை" என்று காலாநிதி வோலி குறிப்பிடுகிறார். பெர்மிங் ஹாமில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கையெழுத்துப் பிரதி 'இன்றுவரை எஞ்சியிருக்கும் விலைமதிப்பற்ற" பிரதியாக இருக்கக் கூடும் என்று அவர் கணித்துள்ளார்.
தற்போதைய ஈராக்கின் மொசூலில் பிறந்த கல்தேயன் மதகுருவான அல்பொன்சே மின்கானாவினால் 1920களில் சேகரிக்கப்பட்ட 3000க்கும் அதிகமான மத்திய கிழக்கு ஆவணங்களில் இருந்தே இந்த குர்ஆன் பிரதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பண்டைய ஆவணங்களை சேகரிக்க மின் கானாவுக்கு பிரிட்டன் நாட்டின் சொக்கலெட் உற்பத்தி வம்சத்தை சேர்ந்த தொழிலதிபர் எட்வட் கட்பரி அனு சரணை வழங்கியிருந்தார்.
இந்த கண்டுபிடிப்பு குறித்து பிரிட்டனின் உள்நாட்டு முஸ்லிம்கள் ஏற்கனவே தமது மிகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். இந்த கையெழுத்துப் பிரதி பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படவிருப்பதாக பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பழமையான குர்ஆன் முழுமையாகக் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சியடையலாம். பாவனையில் இன்றுள்ள குர்ஆனின் பிரதிகளை ஒப்பிட்டு வரலாற்று உண்மைகளை சரியாக அறிந்துகொள்ள வழிகிடைக்கும்.
ReplyDeleteAllahu akbbr islam going more n more top
ReplyDelete