Header Ads



எனது தம்பியின் (எம்.பி.யின்) புதிய காதல் போலியானது

நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வடக்கில் எவராவது தெருவில் போராடினால் கூட அவர்களின் போராட்டம் இராணுவத்தால் நசுக்கப்பட்டது. இராணுவ புலனாய்வுத் துறையினர் சுற்றி வளைத்தார்கள். இன்று அப்படியெல்லாம் கிடையாது. ஆகவே, கடந்த காலங்களை விட ஒரு முன்னேற்றம் இருக்கின்றது. ஆனாலும் முழுமையாக திருப்தியடைய முடியாது. படிப்படியாக செல்ல வேண்டும். அதை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம், என்றார்.

இதேவேளை, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது அதில் ஒரு தமிழ் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் கேட்ட போது ரணில் விக்ரமசிங்க வழங்கிய பதில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கியது. இது தொடர்பில் மனோ கணேசனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மனோ கணேசன், பிரபா கணேசனுக்கு தமிழ் மொழி மீதான புதிய காதலும் பற்றும் போலித்தனமானது என்று குறிப்பிட்டார்.அத்துடன், அவருக்கு தமிழ் மொழி மீதும் மக்கள் மீதும் அக்கறை இருந்திருந்தால், தமிழ் மக்களை அழித்தொழித்த மஹிந்த ராஜபக்‌ஸவின் அரசாங்கத்துடன் இணைந்திருக்க மாட்டார் எனவும் சுட்டிக்காட்டினார்.

இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.