Header Ads



பலி மேடையாகும் 'கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை'

-முபாரிஸ்-

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கென உலக வங்கியின் நிதியின் மூலம் திட்டமிடப்பட்டிருந்த தலா 25 கோடி ரூபா பெறுமதியான முழு உபகரணங்களுடன் கூடிய அவசர சிகிச்சை கட்டிடத்தொகுதி திடீரென வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கைமாற்றப்பட்டுள்ளன என்று அறியமுடிகிறது.

கல்முனை பிராந்திய மக்களினதும், தென்கிழக்கு மக்களினதும் பெரும் சொத்தாக திகழும் நமது அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை குறித்த சர்சைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை குறித்த கடந்த கால சர்ச்சைகள், பெளதீக வளப் பற்றாக்குறை, நிர்வாகக் குறைபாடுகள், மூலம் இதை வெறுமனே அயல் சமூகத்தாரின் சதியாக மட்டும் கருதிவிட முடியாது.

அதென்னவோ தெரியவில்லை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியாசாலைக்கு வருகின்ற கட்டிடங்களும், உபகரணங்களும் மாட்டும்தான் கைமாருவதும், பறிபோவதும். காரணம் இப்படியான சதிகள்  நமது வைத்தியசாலைக்கு இடம்பெறுவது இதொன்றும் முதல் தடவையுமில்லை. சுனாமிக்கு பின்னரான காலத்திலும் கிறிஸ்டியன் எயிட் என்ற நிறுவத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற முழு கருவிகளுடன் கூடிய கண் சத்திரசிகிச்சை கூடமும் கூட அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கென்றே திட்டமிடப்பட்டிருக்கையில், பின்பும் அந்த கட்டிடம் குறித்த அதே வைத்தியசாலைக்கே கைமாறப்பட்டன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கப்பால் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியாசாலையில் பௌதீக வளப்பற்றாக்குறை, மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை வழங்காமை, ஊழியர்களினது அலட்சிய போக்கு இப்படியான குறைகள் தொடர்ந்தும் நிலவிக்கொண்டே வருகின்றன.

அப்படி என்றால் இதற்கு காரணம் அயல் சமூகத்தவரின் சதியாக மட்டும் இருந்துவிட முடியாது. ஆணி வேர் பிரச்சினை நமக்குள்ளே தான் உள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் அசமந்த போக்கு, அவர்களுக்கிடையேயான பனிப்போர் ஆகிவற்றின் விலையே இந்த வைத்தியசாலைக்கு நடக்கும் துரோகங்களாகும். 

வைத்தியசாலையின் நிர்வாகத்தினருக்கும், நம்மூர் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடைப்பட்ட பனிப்போரு பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே!. இவர்களின் தனிப்பட்ட பிரச்சினைய தீர்க்கும் பலி மேடையாக முழு தென் கிழக்கு மக்களினதும் சொத்தான வைத்தியசாலை வீணாக்கபடுவது எங்கனம் நியாயம்.

குறித்த நிர்வாகத்தினர், வைத்தியசாலையை மேம்பட நிர்வகிப்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் தடையாக உள்ளார் என்று குற்றம் சாட்டுவதும், குறித்த பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையை அபிரிவிருத்தி செய்ய நிர்வாகத்தினர் இடமளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி ஆளாளுக்குள் ஒழியவே முயற்சிக்கின்றனர்.

உண்மையில் இரு தரப்பினராலும் புனையப்படும் தடைகள் எதிர்நோக்கப்படும்  பட்சத்தில், இருதரப்பில் எவரேனும் யாரவது மக்கள் முன் வந்து இந்தப்பிரச்சினையை மக்களிடம் முன்வைக்களாமே; நான் மேற்கொண்ட குறித்த முயற்சிக்கு தடையாக எம்பி இருந்தார் என்றோ அல்லது நிர்வாகத்தின் வைத்தியட்சகர் இருந்தார் என்றோ இவர்களால் கூற முடியுமா?

எதிர்வருகின்ற ஜும்மா தொழுகையின் பின்போ அல்லது பொது இடத்திலோ இருதரப்பினரில் யாராவது எழுந்து பேசட்டும், வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதில் எதிர்நோக்கப்படுகின்ற தடைகளை மக்களிடம் முன்வைக்கவும். அப்போது உண்மை என்னவென்பது ஊருக்கும் தெரியவரும், மக்களும் யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்த்துக் கொள்வார்கள், இந்தப்பிரச்சினைக்கும் ஒரு முடிவும் கிட்டும். 

அதை விட்டுவிட்டு வருகின்ற அபிரிவிருத்திகளைக்கூட பாதுகாக்க தெரியாமல் போன தங்களது பலவீனத்தை மற்றவரின் பலவீனத்தின் பால் மறைக்கவே இரு தரப்பும் முயற்சிக்கிறார்கள் என்பதே நிதர்சனம். 

இறுதியாக இருதரப்பினருக்கும்!

உங்களிருவரினதும் தனிப்பட்ட குரோதத்தினால் அல்லது பலவீனத்தால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது நமது சமூகத்தின் சொத்தும், ஏழை பாமர மக்களுமே!

2 comments:

  1. இன்னுமாடா இந்த ஊர் நம்மள நம்புது! அது அவங்க விதி தல !! ஆன்ங் !!!

    ReplyDelete
  2. @முனையுரான் முபாரிஸ் உங்கள் பதிவில் உண்மை இருப்பினும் வைத்தியசாலையின் அத்தியட்சகர் அரச ஊழியர்...எம்.பி யோ மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் அதிகாரமுடையவர் அவரது 5 வருட எம்,பி,பதவி நிதி ஒதுக்கீட்டில் 1 ருபாவேனும் ஆசுபத்திரிக்கு ஒதுக்கப்படவில்லை ஒரு புறமிருக்க...சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீடு மூலம் வைத்திய அத்தியட்சகரினது முயற்சியும் பணியாளர்களின் ஒத்துழைப்பும் 40 மில்லியன் நிதியில் இரத்த வங்கி நிர்மாண பணி ஆரம்பிக்கபட்டுள்ளது...250 மில்லியன் உலக வங்கி நிதி ஒதுக்கீடு மூலம் தீர்மானிக்கப்பட்ட அவசர சத்திர சிகிச்சை பிரிவு வைத்திய அத்தியட்சகரின் அதிகாரத்திக்கு மேற்பட்டவர்களால் மாற்றப்படும் போது அவ்விடயத்தில் அக்கறை காட்டவேண்டிய முழு பொறுப்பு அரசியல் அதிகாரம் படைத்தவர்களுக்கே உண்டு என்பது எளிமையான எண் கணிதம் தான்...ஆனால் சுகாதார அமைச்சர் இன்று அஸ்ரப் ஞாபகார்த்த சாலைக்கும் விஜயம் செய்த நிலைமையில் ஊரில் இருந்த தொகுதி எம்.பி.கல்முனையின் இரு ஆசுபத்திரி நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை என்றால் இதை யாரிடம் சொல்லி அழலாம்....???

    ReplyDelete

Powered by Blogger.