அனுர குமார திஸாநாயக்கா, நாட்டில் இல்லை
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க திடீரென கட்சியை விட்டு விலகி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் ஊடகங்கள் தற்போதைய தலைவர் அனுர குமார திஸாநாயக்கவிடம் கேள்வியெழுப்ப முயற்சித்துள்ளன.
இது தொடர்பாக கட்சி பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் கட்சி தலைவர் நாட்டில் இல்லை என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க நேற்று ஜேர்மனியில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதாகவும் அதற்காக கடந்த 14ம் திகதி நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும் 20ம் திகதி மீண்டும் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மன், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளில் அனுரகுமார திஸாநாயக்க கருத்தரங்குகளில் பங்கேற்க உள்ளதாக கட்சி பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Post a Comment