Header Ads



மகிந்தவிற்கு நிகழ்ந்ததைப்போன்று, இந்த அரசாங்கத்திற்கும் நிகழும் - ஜே.வி.பி. எச்சரிக்கை

ராஜபக்ஸ விண்வெளியில் இருந்தார். வாழ்நாள் முழுவதும் தாமே ஜனாதிபதி என அவர் நினைத்திருந்தார். எனினும், மக்கள் தமது ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி அவரை கீழே இறக்கினர் என பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கம்புறுப்பிட்டிய – மாபலானே பகுதியில் கட்சி அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்ததாவது,

ராஜபக்ஸ விண்வெளியில் இருந்தார். வாழ்நாள் முழுவதும் தாமே ஜனாதிபதி என அவர் நினைத்திருந்தார். எனினும், மக்கள் தமது ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி அவரை கீழே இறக்கினர்.

அந்த மக்கள் நல்லாட்சியை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் தம்மை தோற்கடிக்க முயற்சித்த எஸ்.பி. திசாநாயக்க போன்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை தாரைவார்ப்பது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடமையல்ல.

மக்களும் அதனை எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆட்சியின் போது ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை தாலாட்டாது அவர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

தற்போதைய ஆட்சியில் மத்திய வங்கியின் ஆளுநருக்கு சலுகைகள் வழங்கப்படுமானால் அதுவே தற்போதைய ஆட்சியாளர்களினதும் முடிவாக அமைந்துவிடும்.  ஆனால் தற்போது ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதாக தெரியவில்லை.

ஊழல்வாதிகளை இனம் கண்டு அரசாங்கம் தண்டனை வழங்காவிட்டால், மகிந்தவிற்கு நிகழ்ந்ததைப்போன்று இந்த அரசாங்கத்திற்கும் நிகழும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2 comments:

  1. Jvp dont challenge with new govt.just started.cant di everything within100days.you should patient and compromise with my3 govt.

    ReplyDelete
  2. ஆம், இந்த அரசாங்கம் போகின்ற போக்கு சரியில்லை. தற்பொழுது மக்களுக்கு இருக்கும் ஒரே ஒரு மாற்றீடு JVP மட்டுமே. இதுவரை மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகளால் எவ்வித எதிர்பார்த்த நன்மையையும் மக்களுக்கு இல்லை. மாறி மாறி ஊழல் செய்ததுதான் நடந்த ஒரே விடயம்.

    ReplyDelete

Powered by Blogger.