Header Ads



பிரபாகரன் சுனாமியின் போதே இறந்துவிட்டார் - கோட்டை ரயில் நிலையம் முன் போராட்டம்


வேலுப்பிள்ளை பிரபாகரன், 2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெற்ற சுனாமி பேரழிவிலேயே மரணித்து விட்டதாக கூறிக் கொள்ளும் நபர் ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அனுமதி பெற்றுத்தரக் கோரி போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே அவர், இன்று 06-04-2015 இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தான் மஹா பராக்கிரமபாகு மன்னன் என்றும் தான் மீண்டும் பிறந்து, நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக செயற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

பிங்கிரிய தளுபனயை வசிப்பிடமாக கொண்ட நீல் தம்மிக்க குணசிங்க என்பவரே இவ்வாறு தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார்.

மேலும் அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவோ, முன்னாள் இராணுவத்தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவோ அழித்தொழிக்க முடியாது.

வேலுப்பிள்ளை பிரபாகரன், 2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெற்ற சுனாமி பேரழிவிலேயே மரணித்து விட்டதாகவும் அவர், எழுதி வைத்துள்ள சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்கு தெரிந்த சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காக ஜனாதிபதியை சந்திப்பதற்கு சந்தர்ப்பமொன்றை பெற்றுகொடுக்குமாறு கோரியே இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இந்த மாதிரி மனுஷன் பிஸியா இருக்குற நேரத்திலேயா கொமடி பண்றது? இல்லாட்டி நாங்களும் வந்து இந்த கூத்தை பார்க்க மாட்டோமா?

    நாளைக்கு ஒருத்தன் வருவான், பிரபாகரன் இந்திய அமைதிப்படை காலத்திலேயே கொல்லப்பட்டு விட்டார், நான்தான் விஜயன் என்று சொல்லிக்கொண்டு..... நல்ல தமாஷ் தான்.

    எத்தனை நாள்தான் சீரியஸாக நியூஸ் படிப்பது? அவப்போளுது இப்படிப்பட்ட கொமடிகள் தேவை.

    ReplyDelete
  2. பைத்தியம் முத்திவிட்டது

    ReplyDelete

Powered by Blogger.