Header Ads



பிரான்ஸ் ஆட்சியாளர்களை, ஆச்சரியப்படுத்தும் இஸ்லாம்..!

சார்ளி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டவுடன் ஃப்ரான்ஸில் இஸ்லாம் தனது வீரியத்தை இழக்கும் என்றுதான் எல்லோரும் எண்ணினர். ஆனால் நிலைமையோ தற்போது தலைகீழாக மாறியுள்ளது. முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டவுடன் இஸ்லாம் எப்படி அசுர வேகத்தில் பரவியதோ அதே போன்று இன்று ஃப்ரான்ஸ் முழுவதும் இஸ்லாத்துக்கு ஆதரவான ஒரு சூழல் எற்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ், அல்சபாப், போகோ ஹராம் என்று பல தீவிரவாதக் குழுக்களை இஸ்லாமிய எதிரிகள் ஏற்படுத்தி இஸ்லாத்தை களங்கப்படுத்த நினைத்தனர். ஆனால் மக்களின் நிலையோ வேறு விதமாக இருக்கிறது. நபிகள் நாயகம் என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த பல ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள் இன்று ஆர்வத்தோடு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை வாங்கிச் செல்கின்றனர். குர்ஆனின் மொழி பெயர்ப்பு மிக அதிக அளவில் விற்றுத் தீர்கிறது.

ஃபிளாசபி மேகசின் (Philosophie magazine) என்ற பத்திரிக்கையின் டைரக்டர் ஃபேப்ரிக் ஜெர்சல்(fabric gerchel) கூறுகிறார் 'தற்போது ஃப்ரான்ஸில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மிக வேகமாக விற்பனையாகின்றன. பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பிறகு இந்த விற்பனை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதத்தில் குர்ஆனின் மொழி பெயர்ப்பு விற்பனையானது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது'

Mathilde Mahieux, of La Procure chain of bookshops என்ற புத்தக நிறுவனமானது மத சம்பந்தப்பட்ட புத்தகங்களை மட்டுமே அச்சிட்டு விநியோகிக்கும் ஒரு நிறுவனம். இவர்கள் கூறுவதாவது 'ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் போன்ற அமைப்புகள் எதை செய்தாலும் 'அல்லாஹூ அக்பர்' என்று கூறி பல கொலைகளை செய்கிறார்களே. உண்மையில் குர்ஆன் இதனைத்தான் போதிக்கிறதா? என்று தேடுதலில் பல மக்கள் ஈடுபடுகின்றனர். ஆய்வு செய்வதற்காக நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றையும், குர்ஆனின் மொழி பெயர்ப்புகளையும் ஃப்ரான்ஸ் மக்கள் அதிகமதிகம் வாங்கிச் செல்கின்றனர். இந்த எழுச்சியை முன்பு நாங்கள் கண்டதில்லை' என்கின்றனர். 

'அல்புராக்' என்ற பெயரில் புத்தக பப்ளிசராக பணிபுரியும் இஸ்லாமியரான மன்சூர் கூறுகிறார் 'தற்போது இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளன. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு நிலைமை எவ்வாறு இருந்ததோ அது போன்ற நிலையை நான் தற்போது பார்க்கிறேன்' என்கிறார்.

Yvon Gilabert யுவான் கிளாபர்ட் வெஸ்டர்ன் ஃப்ரான்ஸில் புத்தக கடை நடத்தி வருபவர். அவர் கூறுகிறார் 'கத்தோலிக்க பெண் ஒருவர் என்னிடம் வந்து குர்ஆனின் மொழி பெயர்ப்பு கேட்டார். 'நீங்கள் கத்தோலிக்கர் ஆயிற்றே! குர்ஆன் எதற்கு' என்று கேட்டேன். 'குர்ஆன் உண்மையில் வன்முறையைத்தான் போதிக்கிறதா' என்பதை ஆய்வு செய்வதற்காக இதனை வாங்குகிறேன்' என்கிறார். 

சென்ற மார்ச் மாதம் ஃப்ரான்ஸ் புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையான புத்தமாக கருதப்பட்டது “A Christian Reads The Koran,” என்ற புத்தமாகும். இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1984 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ஜீன் ராய் சர்போர்ன் பல்கலைக் கழகத்தில் புரபஸராக வெலை செய்து வருகிறார். இவர் தனது அனுபவத்தைப் பகிரும்போது 'ஓரிறைக் கொள்கை என்ற தத்துவமானது பொதுவாக எல்லோரும் ஒத்துக் கொண்ட ஒன்று. தற்போது குர்ஆனை ஆழ்ந்து படித்து வருகிறேன். இனி எனது கல்லூரி பாடங்களில் குர்ஆனும் இடம் பெறும்' என்கிறார்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
04-04-2015

இதை எல்லாம் படித்துப் பார்த்த போது எனக்கு ஒரு குர்ஆன் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’ 

(அல்-குர்ஆன் 3:54)
சுவனப் பிரியன்

7 comments:

  1. ஜப்னா முஸ்லிம்??? என்ன??? கருத்தை போடா முடியாதா? அல்லாஹ் சதி செய்கின்றான் என்று மொழி பெயர்ப்பது, சதி செய்தல் என்கின்ற குருமதிப் பண்பு இறைவனுக்கு இருக்கின்றது என்று சொல்வது இறைவன் குறித்து எவ்வளவு அபத்தமான கருத்து.

    இந்த உண்மையை சொல்ல எனக்கு உரிமை இல்லையா? மக்கள் தொடர்ந்தும் மடமையில் இருக்க வேண்டுமா?

    ReplyDelete
  2. லிட்ல் ஸ்டார் ரொம்ப சரியாக தான் சொன்னீங்க நானும் மனதளவில கவல பட்டுகொன்டு தான் இருந்தன் அவங்க சதி செய்யும் போது அள்ளாஹ் சதிக்கு எதிராக கூலி கொடுக்கிறான் எனபதற்கு பதிலாக பல இடங்களிலும் தப்பான கருத்தைதான் வைக்கிறார்கள் சுட்டிக்காட்டியதன் பின்பாவது தவறின் பாரதூரத்தை அறிந்து திருத்திக்கொன்டால் நல்லது.

    ReplyDelete
  3. 54. (ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்6. அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன்.
    அல்லாஹ் இயலாதவனா?

    அல்லாஹ் அனைத்து ஆற்றலும் மிக்கவன். எந்தக் காரியத்தையும் அவன் செய்வதென்றால் "ஆகு'' எனக் கூறினால் உடனே ஆகி விடும்.

    ஆனால் "அல்லாஹ் சூழ்ச்சி செய்கிறான்", "அல்லாஹ் கேலி செய்கிறான்", "அல்லாஹ் ஏமாற்றுகிறான்" என்பன போன்ற வாக்கியங்கள் திருக்குர்ஆனில் பரவலாகக் காணப்படுகின்றன.

    ஏமாற்றுதல், கேலிசெய்தல் போன்றவை கையாலாகாத பலவீனர்களின் செயல்களாகும். "ஆகு" என்று கூறி ஆக்கும் வலிமை பெற்றவன், திட்டமிட்டு சூழ்ச்சி ஏதும் செய்யத் தேவை இல்லை என்று சிலர் நினைக்கலாம்.

    பெரும்பாலான மொழிகளில் இத்தகைய சொற்பிரயோகங்களை அதற்குரிய நேரடிப் பொருளைத் தவிர்த்து வேறு பொருளில் பயன்படுத்துவதைக் காணலாம்.

    உதாரணமாக, "நீ வரம்பு மீறினால் நான் வரம்பு மீறுவேன்'' என்று நாம் கூறும் போது, முதலில் உள்ள வரம்பு மீறுதல் அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாகக் கூறப்பட்ட வரம்பு மீறுதல், பதிலடி என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் நமக்கெதிராக வரம்பு மீறிய பின் அதற்குப் பதிலடி தருவது வரம்பு மீறலாக ஆகாது.

    "அவர்கள் கேலி செய்தால் அல்லாஹ்வும் கேலி செய்வான்'' என்பது "கேலி செய்ததற்கான தண்டனையை வழங்குவான்'' என்ற கருத்திலும்,

    "அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்'' என்பது "சூழ்ச்சியைத் தோல்வியுறச் செய்வான்'' என்ற கருத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    "நீ செய்தால் நான் செய்வேன்'' என்ற தோரணையில் அமைந்த, இறைத் தன்மையைப் பாதிக்கும் வகையிலான அனைத்துச் சொற்களையும் இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும்.

    கண்டிக்கும் வகையில் இல்லாமல் பாராட்டும் வகையிலும் இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    "என்னை நீ நினைவு கூர்ந்தால் நானும் உன்னை நினைவு கூர்வேன்'' "நீ நன்றி செலுத்தினால் நானும் நன்றி செலுத்துவேன்'' என்று இறைவன் கூறுவான். இறைவன் நம்மை நினைவு கூரத் தேவையில்லை. நன்றி செலுத்தவும் தேவையில்லை. அதற்கான பலனைத் தருவான் என்றே இது போன்ற சொற்களைப் புரிந்து கொள்ள வேண்டும். "இறைவன் சபிக்கிறான்'' என்றால் "தண்டிக்கிறான்'' என்று புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Little star ethilum thirupthi kaanaatha thanakku mattum thaan ellaam therium enru ninaikkum thannai thaane arinchchan ena ninaikkum orumuttaal.

      Delete

Powered by Blogger.