வன்னி மக்களின் குறைபாடுகளை அறிய, விசேட தெரிவுக் குழு - ஹுனைஸ் பாறூக் வேண்டுகோள்
-றிப்கான் கே சமான்-
ஓருசில மணித்தியாளயளங்களில் விசாரித்து முடிவு கட்டிவிடக்கூடியதல்ல இந்த வன்னி மாவட்ட மக்களின் பிரச்சினையென பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தெரிவித்தார்.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதம மந்திரியுமான கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்திருந்த போது அங்கு நிலவும் குறைபாடுகள் பற்றிக் கேட்டறிந்தார் இந்த நிகழ்வின் போது உரையாற்றும் போதே மேற்படி விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களே கடந்தகால யுத்தத்தின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும் இப்பகுதி மக்கள், இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து காணி, வீடு, பாதை மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பல்வேறு பிரச்சிணைகளுக்கு மத்தியில் மீளக்குடியேறிவருகின்றனர்.
இராணுவத்தினர் வசமிருக்கின்ற இவர்களின் சொந்தக் காணிகள், மீள்குடியேற்றத்தில் இவர்கள் சந்தித்துவரும் ஏனைய பிரச்சிணைகள் போன்றவற்றையும் மற்றும் இவர்களின் தேவைப்பாடுகள் பற்றியும் இந்த ஒருசில மணித்தியாலயத்தில் விசாரித்து தீர்த்துவிடமுடியாது எனவே இவர்களின் பிரச்சினைகளைத்தீர்ப்பதற்காக வன்னிமாவட்டத்தில் ஒரு விசேட குழுஒன்றை அமைத்து அதன்ஊடாக அறிக்கைகளைப் பெற்று உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் இங்கு வேண்டுகோள் விடுத்தார்.
Post a Comment