Header Ads



அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரத்தில், ஏன் கடிகாரம் இல்லை..?

(எம்.ஏ.றமீஸ்)

அக்கரைப்பற்று நகர்ப்பகுதியில் நீண்ட காலத்திற்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரம் பல வருடங்களாக கடிகாரமற்ற வெற்றுக்கோபுரமாகவே காணப்படுகின்றது.

இம்மணிக்கூட்டுக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு சில காலம் சரியான நேரத்தைக் காட்டி இயங்கி வந்த போதிலும் பல வருடங்கள் இதில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரங்கள் இயங்காமல் ஓரே நேரத்தையே எப்போதும் காட்டியவாறு காட்சியளித்து வந்தது.

இந்நிலைமை தற்போது மாறி இதில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரங்கள் அகற்றப்படடு கடிகாரங்களிருந்த பகுதிகள் அடைக்கப்பட்டு காணப்படுவதுடன் இதன் மேற்பாகத்தில் தற்போது ஆலமரம் வளர்ந்து வருகின்றது. பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நகர்ப்புறத்தில் நிர்மாணிக்பட்ட இம்மணிக்கூட்டுக் கோபுரத்தில் கடிகாரத்தைப் பொருத்திப் பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை பொது மக்கள் வேண்டுகின்றனர்.

1 comment:

  1. மணிக்கூடில்லா கோபுரம் என்றோ ஆலமரக் கோபுரம் என்றோ பெயரை மாற்றி விடவேண்டியது தானே. காலம் மாறிப் போய்ச்சே. இப்போதெல்லாம் ஆளுக்கு ஒன்று, இரண்டு மொபைல். போதாமைக்கு கையில் ஒரு கடிகாரம் வேறு.

    ReplyDelete

Powered by Blogger.