பாராளுமன்றத்தை கலைக்க, மைத்திரியை கட்டாயப்படுத்தும் ரணில்..? NO என்கிறார் நிமால்
புதிய தேர்தல் முறைமை சேர்க்கும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 19 வது திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதம் திட்டமிட்டபடி நாளை நடக்காவிட்டால், உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதியை கட்டாயப்படுத்துவதென ஐ.தே.க உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான இறுதி அறிவித்தலை நாளைய தினமே ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார் எனவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, இன்றையதினம் சுதந்திரக் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அதில், 19வது திருத்தம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment