விமான விபத்துகளை தடுக்க, இளம் விமானிகள் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் - துருக்கி
விமான விபத்துகளை தடுக்க, இளம் விமானிகள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என துருக்கி நாட்டு விமான நிறுவனம் அறிவுறித்தியுள்ளது.
லூஃப்தான்சா நிறுவனத்தை சேர்ந்த ஜேர்மன்விங்க்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி, 150 பயணிகளுடன் பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்திற்கு விமானத்தின் துணை விமானியான ஆண்டிரியா லூபிட்ஸ் தான் காரணம் என இரண்டு கருப்பு பெட்டிகள் மூலம் தெரியவந்தது.
இது குறித்து பேசிய Turkish Airlines நிறுவனத்தின் பொது மேலாளர் Temel Kotil, ஜேர்மன்விங்க்ஸ் விமானத்தின் துணை விமானியின் காதலி அவரை விட்டு பிரிந்ததால், அவர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த மன உளைச்சல் தான் அவரை விமானத்தை மலையில் மோதி விபத்துக்குள்ளாக்க தூண்டியது.
அதனால், துருக்கி விமான நிறுவனத்தில் விமானிகளாக பணிபுரியும் இளம் வயது விமானிகள் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஆண் அல்லது பெண் விமானியாக இருந்தாலும், அவர்களது வாழ்வியல் நடைமுறைகள், பணியை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றும் Temel Kotil வலியுறுத்தியுள்ளார்.
உலக அளவில் உள்ள விமான சேவைகளில் துருக்கி நாட்டு விமான நிறுவனங்கள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், விமானங்களில் பெண் விமானிகளை பணியில் அமர்த்துவதை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது உள்ள 4,000 விமானிகளில் 40 விமானிகள் மட்டுமே பெண்களாக உள்ளனர் என்றும் இதை சுமார் 10 சதவிகிதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் Temel Kotil தெரிவித்துள்ளார்.
Post a Comment