மைத்திரி சுதந்திரக் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டும், இல்லையேல் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவேண்டும்
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தனது கட்சியை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாவிடின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்று நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரை தன்னால் முடியாவிடின் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன கட்சித் தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி பதவியிலிருந்து நீங்க வேண்டும். என்றார்.
கொழும்பிலுள்ள நவ சம சமாஜக் கட்சியின் காரியாலத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிபபிடுகையில்,
நாட்டில் இதுவரை காலமும் அராஜக ஆட்சியே காணப்பட்டு வந்தது. ஆயுத களஞ்சியசாலைகளை மறைவான முறையில் நடத்திவந்துள்ளனர். அததோடு வௌ்ளை வேன் கடத்தல்களும் குறித்த காலப்பகுதியில் இடம்பெற்றன. வௌ்ளை வேன் கடத்தல்களுக்காகவே இவ்வாறான ஆயுத களஞ்சியசாலை நடத்தப்பட்டிக்காலாம் என தெரியவருகிறது. எவ்வாறாயினும் இது தொடர்பில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்பிறகு உண்மை நிலைவரம் நாட்டிற்கு தெரியவரும்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தை கூண்டோடு அழிக்க முனைந்தார். எனினும் அதற்கு இடம் கிடைக்கவில்லை. மக்கள் இந்த அராஜக ஆட்சியை தோற்கடித்து விட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை எவருக்கும் சமப்படுத்த முடியாது. ஜே.ஆர் ஜெயவர்தன கூட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை கொண்டு வந்தாலும் நாட்டு மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தினுடாக மாகாண சபை முறைமையை கொண்டு வந்து வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினை தீர்க்க வழிவகைகளை செய்தார்.
அத்தோடு இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பிரஜா உரிமையை வழங்கினார். இவ்வாறான நன்மைகளை செய்தார். எனினும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இவ்வாறான நன்மைகள் மக்களுக்கு கிடைக்கவில்லை.இந்நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்ளை குறைக்கும் வகையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தின் வியாக்கியத்தின் பிரகாரம் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான திருத்தங்களுக்கு 19 ஆவது திருத்தச்சட்டம் உட்படுத்தப்பட்ட போதிலும் தேர்தல் முறைமை மாற்றம் செய்யப்பட்டால் மாத்திரமே 19 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவோம் என்று சுதந்திர கட்சி வீண் கோஷங்களை எழுப்பி வருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரை தன்னால் முடியாவிடின் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன கட்சித் தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி பதவியிலிருந்து நீங்க வேண்டும். என்றார்.
Post a Comment