மைத்திரியும், ரணிலும் மோசடிக்காரர்கள் அல்ல என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால்...?
நல்லாட்சியை கொண்டு வருவதாக கூறிய, பிரதான இரு கட்சிகளிலும் மோசடிக்காரர்களே உள்ளார்கள் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
காலியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இவ்வாறான ஒரு நிலை நாட்டில் காணப்படும் போது நல்லாட்சியை கொண்டு செல்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரு கட்சிகளினாலும் நியமிக்கப்பட்டவர்களில் 50 வீதமானோர் மோசடிக்காரர்களே. அவர்களின் அலுமாரியில் எலும்பு கூடுகளே காணப்படுகின்றன.
இது இரு கட்சிகளுக்குமே காணப்படுகின்ற மிக பெரிய பிரச்சினை. தற்போதைய அரசாங்கத்தின் பங்காளிகள் என்பதே. ஐக்கிய தேசிய கட்சி தனியாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்கியிருக்க மாட்டார்.
இரண்டு, மூன்று பேரை சிறைக்கு அனுப்பி நல்லாட்சி கொண்டு செல்ல முடியாது. பிரதமரும், ஜனாதிபதியும் மோசடிக்காரர்கள் அல்ல என்பது எங்களக்கு தெரியும், எனினும் அவர்களுக்கு கீழ் செயற்படுபவர்கள் மோசடிக்காரர்களே என பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சரியான கருத்துக்கள், அனால் இரண்டு மூன்று பேர் அல்ல, ஒரு எறும்பு கூட சிறைக்கு அனுப்பப் படவில்லை என்பதுதான் உண்மை.
ReplyDeleteவாழ்க நல்லாட்சி, வாழ்க துமிந்த சில்வா, வாழ்க ஹெரோயின்.