Header Ads



மைத்­தி­ரி­பாலவுக்கு எதிராக ஐக்­கிய தேசியக் கட்சி, மிகப்­பெ­ரிய சதி வலை­யினை பின்­னு­கின்­றது - சம்­பிக்க

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை முற்­றாக நீக்கி அதி­கா­ரங்­களை பிர­த­மரின் கைகளில் ஒப்­ப­டைக்க நாம் ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம் , மக்­களின் ஆத­ர­வில்­லாது பிர­த­ம­ரா­கியுள்ளதை ரணில் விக்­ர­ம­சிங்க மறந்­து­விட வேண்டாம் என அமைச்­சரும் ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ள­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார் .

அடுத்த அர­சாங்­கத்தில் ரணில் பிர­த­ம­ரா­வது கடி­ன­மான விட­ய­மே­யாகும். அதற்­கா­கவே தொடர்ந்தும் தேசிய அர­சாங்­கத்தை வலுப்­ப­டுத்த நினைப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார் .

பொதுத் தேர்­த­லுக்கு பின்­னரும் தேசிய அர­சாங்­கத்தை அமைக்க ஐக்­கிய தேசியக் கட்சி வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலை­மையில் ஜாதிக ஹெல உறு­ம­யவின் நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார் . அவர் தொடர்ந்தும் கூறி­ய­தா­வது ,

ஜனா­தி­பதி முறை­மையில் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது , சர்­வா­தி­கார போக்கில் பய­ணிக்கும் ஜனா­தி­பதி முறை­மையை ஜன­நா­யக பாதையில் கொண்­டு­செல்­லவே நாம் தேசிய அர­சாங்கம் எனும் கூட்­ட­ணிக்கு ஆத­ரவு வழங்­கினோம் , இதில் 19ஆவது திருத்­தத்­தினை கொண்­டு­வந்து அத­னூ­டாக ஜனா­தி­பதி முறை­மை­யினை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்ற இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது.

ஆனால், எந்­த­வொரு சந்­தர்ப்­ப­திலும் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை முழு­மை­யாக நீக்கி அதை பிர­தமர் கைகளில் ஒப்­ப­டைக்க யாரும் இணங்­கவும் இல்லை, தேர்தல் விஞ்ஞா­ப­னத்தில் குறிப்­பி­டவும் இல்லை , ஆனால் இப்­போது 19ஆவது திருத்த சட்­ட­மூ­லத்தில் பல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சாத­க­மான வகையில் ஜனா­தி­பதி முறை­மை­யினை மாற்­றிக்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர் . நாம் எந்த சந்­தர்ப்­ப­திலும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­யினை நீக்கி அதை பிர­தமர் கைகளில் கொடுக்க அனு­ம­திக்­க­மாட்டோம் . இப்­போது கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள 19 ஆவது திருத்த சட்ட மூலத்தில் தேர்தல் முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்­து­வது , சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்­து­வ­தென பல விட­யங்கள் உள்­ளன. ஆனால் அவை அனைத்­தையும் தவிர்த்து ஜனா­தி­பதி முறை­மையில் மாற்­றத்­தினை கொண்­டு­வர நினைப்­பதால் மட்டும் நாட்டில் மாற்­றங்கள் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை.

மேலும் ஐக்­கிய தேசியக் கட்சி மிகப்­பெ­ரிய சதி வலை­யினை பின்­னு­கின்­றது. இதில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தள்ளி அதி­கா­ரங்­களை தம் வசப்­ப­டுத்தும் நோக்­கத்தில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க வின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன எனவே அதை முறி­ய­டிக்க வேண்டும்.

அதேபோல் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை முற்­றாக நீக்­கு­வதில் மாற்­றங்­க­ளையும் கொண்­டு­வர வேண்டும் , இவ் விட­யங்கள் தொடர்பில் நேற்று கூடிய தேசிய நிறை­வேற்று சபை­யிலும் சுட்­டிக்­காட்­டினோம் . எனவே எதிர்­வரும் பாரா­ளு­மன்ற அமர்வில் சரி­யான முறையில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்ட 19 ஆவது திருத்­தச்­சட்டம் முன்­வைக்­கப்­பட வேண்டும் . இல்­லையேல் அதை தோற்­க­டிக்கும் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுப்போம் .

மக்­களின் ஆத­ர­வில்­லாது ரணில் விக்­ர­ம­சிங்க பிர­த­ம­ரா­கி­யதால் அப் பத­வி­யினை தக்­க­வைத்­துக்­கொள்ள முயற்­சிக்­கின்றார். அதற்கு நாம் இடம் கொடுக்கப் போவ­தில்லை . மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வுடன் ரணில் பிர­தமர் ஆவா­ரெனின் அதை நாம் தடுக்க முடி­யாது , அவ்­வாறு செயற்­ப­டு­வது ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ரா­னதும் கூட , ஆனால் மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டாத நிலையில் வாக்­கு­று­தியின் அடிப்­ப­டையில் பிர­த­ம­ராக மாற்றப்பட்டிருக்கின்றார் . அதை ரணில் விக்ரமசிங்க மறந்துவிடக் கூடாது ,
இன்று தேசிய அரசாங்கம் என்று சொல்லிக்கொள்வதால் மட்டுமே பிரதமர் என்ற அந்தஸ்து ரணில் விக்ரமசிங்க விற்கு கிடைத்துள்ளது. அந்த அந்தஸ்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளவே அடுத்த முறையும் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் இவரின் கருத்துக்கள் அமைகின்றதெனவும் அவர் குறிப்பிட்டார்

1 comment:

Powered by Blogger.