Header Ads



பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்தி, உறு­தி­யான அர­சாங்­கத்தை உரு­வாக்­க­வேண்டும் - மங்­கள சம­ர­வீர

ஜூன் மாத இறு­திக்குள் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்தி உறு­தி­யான அர­சாங்­கத்தை உரு­வாக்­க­வேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் இலங்கை தொடர்­பான அறிக்கை செப்­டெம்பர் மாதம் வெளியி­டப்­ப­ட­வுள்­ள­தனால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று பாரா­ளு­மன்­றக்­கட்­டடத் தொகு­தியில் ஆளும் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கூட்டம் இடம் பெற்­றது. இங்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் மங்­கள சம­ர­வீர இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்:-

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் இலங்கை தொடர்­பான அறிக்கை செப்­டெம்பர் மாதம் வரையில் ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த அறிக்கை செப்­டெம்பர் மாதம் வெளியி­டப்­ப­ட­வுள்­ளது. எனவே இம்­மாத இறு­தியில் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து ஜூன் மாத இறு­திக்குள் தேர்­தலை நடத்தி உறு­தி­யான அர­சாங்­கத்தை நாம் உரு­வாக்­க­வேண்டும். இல்­லையேல் செப்­டெம்பர் மாதம் அறிக்கை வெளியி­டப்­பட்டால் பெரும்­பா­த­க­மான சூழலை நாம் சந்திக்கவேண்டிய நிலை ஏற்படலாம். எனவே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும் என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.