Header Ads



யேமனின் போரை நிறுத்த, உடனடி நடவடிக்கை வேண்டும் - ஈரான்

ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநாவிடம், ஈரான் வலியுறுத்தி உள்ளது.ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது. அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சி படையினர் இடையே நடந்துவரும் மோதலில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படையினர் போரிட்டு வருகின்றனர். கடந்த 3 வாரங்களாக இரு தரப்பினர் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க சவுதி கூட்டுப்படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், 750க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 1.50 லட்சம் பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறி விட்டனர். ஏமனில் தங்கியிருந்து பணிபுரியும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அந்தந்த நாடுகள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தீவிரமடைந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஐநா சபை இறங்கியுள்ளது. போரினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் அகதிகளாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஏமன் அரசு மற்றும் கிளர்ச்சி படையினருக்கு ஐநா பொது செயலாளர் பான்கிமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சி படைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான், இந்த போரை உடனடியாக நிறுத்த ஐநா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக, ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை செயலர் முகமது ஜாவெத் ஐநா சபைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ ஏமனில் நடைபெற்று வரும் போரை நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்கவும், மீண்டும் அமைதி திரும்பவும் ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்” என கூறியுள்ளார்.

5 comments:

  1. ஈரான் தப்புக் கணக்குப் போடுகின்றது, யுத்தம் இப்பொழுது நிறுத்தப்பட விடமாட்டார்கள், ஏனெனில் இன்னும் கொன்று முடிக்கப்பட வேண்டிய முஸ்லிம்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கின்றது. மிகப் பாரிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்பட்டு, நாடு முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட பின்னரே ஈரான் சொல்வது போன்ற ஒரு விடயம் நிகழலாம், இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதே வருத்தமான உண்மை ஆகும்.

    ReplyDelete
  2. Mr. Little star.

    Yemen was not a field of killing their own people, Till hoothis started to kill and capture the land with the support of IRAN. When HOOTHIS killed people till they capture SANA and other parts.. IRAN did not want to say them.. "STOP".. But when they realize their interest is affected and weaking.. they pass statement like this and you support it.

    No question.. the current attack on Yemen Hoothi should only demolish Iranian suppoted Hoothi army but not the public hoothi people who are innocent.
    Islam has given the code how to fight terror. The Arab Army I hope try their best to follow the CODE. if not they are answerable to GOD.

    ReplyDelete
  3. ISIS கொலை செய்தது போன்று ஹூத்திகளை நினைத்துக் கொள்ள வேண்டாம். ஹூத்திகள் எங்கேயும் பொதுமக்களை கொலை செய்யவில்லை. யமனில் பொதுமக்கள் கொலை ஆரம்பமானதே சவூதி விமானத் தாக்குதல்களின் பின்னர்தான். சவூதி தலைமையிலான படைகள் விமானத்தில் இருந்து குண்டு வீசுகின்றன, பெருமளவில் பொதுமக்கள் கொல்லபப்டுகின்றனர், ஹூத்திகள் விட்டுச் செல்லும் இடங்களை அல்கைதாவினர் கைப்பற்றி வருகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. Sir nrenga kala nilavaraththa nerila paarthinga polum

      Delete
  4. MIM ASHRAFF, Please study the history of Yemen before catching something at the tail.

    "little pool" ? pool? yes, you can swim and wash your head too.

    ReplyDelete

Powered by Blogger.