டுபாயில் றிசாத் பதியுதீன்
- இர்ஷாத் றஹ்மத்துல்லா -
ஜக்கிய அரபு இராஜ்சியத்தின் பொருளாதார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த வருடாந்த முதலீட்டாளர்களுக்கான கூட்டமும்,மற்றும் கண்காட்சியும் அண்மையில் துபாயில் அமைந்துள்ள சர்வதேச கூட்ட அரங்கில் இடம்பெற்றது.
ஜக்கிய அரபு இராஜ்சியத்தின் பிரதி ஜனாதிபதியும்,பிரதமருமான ஷேய்க் முஹம்மத் பின் ராசிட் அல் மக்தும் தலைமையில் இடம் பெற்ற இந்த அமர்வில் 140 நாடுகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இலங்கை சார்பில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இதில் கலந்து கொண்டார்.
ஜக்கிய அரபு இராஜ்சியம் விண்வெளி ஏஜென்சி உருவாக்குவதில் வரலாற்று ரீதியான சாதனையாக முன்னிலைப்படுத்த , மற்றும் ஜக்கிய அரபு இராஜ்சியத்தில் இருந்து ஆராய்ச்சி குழு தலைமையில் செவ்வாய் கிரகத்தில் முதல் ஆராய்வதற்கான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக இதன் போது ஜக்கிய அரபு இராஜ்சியத்தின் பொருளாதார அமைச்சர் சுல்தான் பின் சயீட் மன்சூரி இங்கு கூறினார்.
கடந்த 5 வருட காலத்துக்குள் எதிர் கொண்ட பொருளாதார சவால்களை வெற்றி கொள்வதற்கு ஜக்கிய அரபு இராஜ்ஜியம் கையாண்ட விதம் தொடர்பிலும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன்,நெகிழ்வு தன்மையுடன் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புக்களை அதிகரித்தமை அதன் மூலம் ஏற்பட்ட நன்நம்பிக்கை தொடர்பிலும் இதன்போது அந்த நாட்டின் பொருளாதார அமைச்சர் எடுத்துரைத்தார்.
Post a Comment