கஹவத்தயில் மீண்டும் பீதி - காணாமல் போன பெண்ணை தேடி பொலிஸ் குழுக்கள் தேடுதல்
கஹவத்த - கொடகெதன பிரதேசத்தில், காணாமல் போன பெண்ணை தேடும் பணிகள் இன்றைய 06-04-2015 தினமும் தொடரும் என காவற்துறைனர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன பெண்ணை தேடி பிரதேசத்தில், விஷேட தேடுல் நடவடிக்கைகள் முன் எடுக்கப்படுள்ளன.
இதன்பொருட்டு பல காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் காவல்றையினருடன் விசேட அதிரடிப்படையினரும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், இன்றைய தினம் இராணுவத்தினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் என்று காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கஹவத்த கொடகெதன பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடை 3 பிள்ளைகளின் தாயே காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் அவரது கணவரினால் நேற்று அதிகாலை 1.45 அளவில் கஹவத்த காவற்துறையில் முறையிடப்பட்டிருந்தது.
மரண சடங்கொன்றிற்கு சென்றுவிட்டு, தாம் வீடு திரும்பிய போது, மனைவி வீட்டில் இருக்கவில்லை என அவர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
கஹவத்த - கொடகெதன பிரதேசத்தில் கடந்த காலங்களில் பெண் கொலைகள் தொடர்பில் பல தகவல்கள் பதிவாகியிருந்தன.
2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி ஓபாத தோட்டத்தில் 56 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, இதுவரை 17 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் பெண்கள் மட்டும் கொல்லப்படுகின்றனர்?
ReplyDeleteஇதுவும் மதவாதிகளின் ஆணாதிக்க வெளிப்பாடா?