Header Ads



பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற போராட்டம் (முழு வீடியோ) எம்.பி.க்கள் சிலர் உண்ணாவிரதம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்வரும் 24ஆம் திகதி லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.

நாடாளுமன்றத்தின் பிரதான அரங்கின் கம்பளத்தில் அமர்ந்த நிலையில் இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியை லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக்குவது தொடர்பில் இன்று காலை நாடாளுமன்ற அமர்வின் போது, கடுமையான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை நாளை வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ச அறிவித்ததனை அடுத்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

(முழு வீடியோ)

1 comment:

  1. குற்றம் செய்த உள்ளம் தான் குறுகுறுக்கும். சுத்தமாக இருந்தால் எங்கு வேண்டுமானாலும் என்னை விசாரிக்குமாறு மரியாதையோடு கூறியிருப்பாரே.

    ReplyDelete

Powered by Blogger.