Header Ads



மகிந்த ராஜபக்ச குடியேறவிருந்த, மயில் மாளிகையின் உரிமையாளரை காணவில்லை

ஏ.எஸ்.பீ வணிக நிறுவனத்தின் உரிமையாளரான ஏ.எஸ்.பீ.லியனகேவை கடந்த சில நாட்களாக காணவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

அவர் சிங்கள செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஏ.எஸ்.பீ.லியனகே நாவல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது மாளிகையை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இன்று உத்தியோக பூர்வமாக வழங்கவிருந்தார் எனவும் வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.

எனினும் லியனகே திடீர் என காணாமல் போயுள்ளதனால்,பீகொக் மாளிகையில் மகிந்த ராஜபக்சவினால் குடியேற முடியவில்லை.

இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஏ.எஸ்.பீ.லியனகேவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

புலனாய்வு பிரிவுக்கு வருமாறு லியனகேக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பீக்கொக் மாளிகையை வழங்கியதாக கூறப்படும் அதன் உரிமையாளரான வர்த்தகரும் இலங்கை தொழிற்கட்சியின் தலைவருமான ஏ.எஸ்.பி. லியனகேவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று விசாரணை நடத்த உள்ளது.

திணைக்களத்தில் இன்று மதியம் 2 மணிக்கு ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவரது மாளிகையை 450 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்தமை சம்பந்தமாக பண சலவை குற்றச்சாட்டின் கீழ் லியனகேவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

அவர் தனது மாளிகையை விற்றமை தொடர்பில் சில சட்ட ரீதியான பிரச்சினைகள் இருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் லியனகேவுக்கு அறிவித்துள்ளது.

1 comment:

  1. சோழியன் குடுமியே சும்மா ஆடாது என்றால், மயில் மாளிகையைக் கொடுக்கின்றார் என்றால் எவ்வளவு பெரிய பின்னணி இருக்க வேண்டும். கடைசியில் எல்லாம் ஊடகங்களுக்கு வெறும் செய்திகளாக அமையுமே தவிர, நடவடிக்கை என்று எதுவும் இருக்காது என்பதுதான் கவலை.

    ReplyDelete

Powered by Blogger.