Header Ads



சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கைக்குள், வருவதற்கு அரசாங்கம் அனுமதி மறுப்பு..!

சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கைக்குள் வருவதை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

இதனையடுத்து சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை மற்றும் பராமரிப்பு, விநியோகம் என்பவற்றை பாகிஸ்தானின் க்வாடர் துறைமுகம் (Gwadar port) பொறுப்பேற்றுள்ளது. 

இந்த நகர்வு சீனாவை பொறுத்தவரை முக்கியமான ஒன்று என்று சங்காய் நிறுவக தென்னாசிய கற்கை நெறிகளுக்கான பணிப்பாளர் ஸாவோ கன்சேங் (Zhao Gancheng) தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் க்வாடார் துறைமுகம் இனிவரும் காலங்களில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருட்களை ஏற்றி இறக்கும் முக்கிய துறைமுகமாக மாற்றமடையும் என்று கன்சேங் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் சீனாவின் சியான்ஜிங் பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.