ஜெய்லானிக்குள் அத்துமீறி நுழைவதற்கு முயன்ற சிங்கள ராவய முயற்சி - பொலிஸார் தடுத்து நிறுத்தினர்
புனித ஸ்தலமொன்றுக்குள் அத்துமீறி நுழைவதற்கு முயன்ற சிங்கள ராவய அமைப்பினரை பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டு கலைத்துள்ளனர்.
லாங்கொட, ஜெய்லானி வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள ராவய அமைப்பினர் மீதே தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டுள்ளது.
அந்தப் பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
கல்தோட்டை பொலிஸார் நீதிமன்ற உத்தரவு தொடர்பில் சிங்கள ராவய குழுவினருக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி சிங்கள ராவய அமைப்பின் குழுவினர் புனித பூமிக்குள் நுழைய முற்பட்டமையினால், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கலைக்கப்பட்டதாக
குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை இன்று காலை முதல் குரகல புனித பூமிக்கு செல்லும் பாதையை மறித்து சிங்கள ராவய அமைப்பினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment