வடமாகாணத்தில் ஜிகாத், செயற்பாடுகள் அதிகரிக்கிறது - இந்தியா
-gtn-
இலங்கையின் வடபகுதியில் ஜிகாத் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரிப்பதையும்,அவர்களுக்கு பாக்கிஸ்தானுடன் உள்ள தொடர்பால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் இலங்கை அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளதாவது
தென்னிந்தியாவில் குண்டு தாக்குதல்களுக்கு திட்டமிட்ட பாக்கிஸ்தானின் இலங்கை தூதரக அதிகாரி சித்தீக் குறித்த இந்தியாவின் விசாரணைகள் முட்டுக்கட்டை நிலையிலுள்ளன. குறிப்பிட்ட அதிகாரி குறித்த விபரங்களை சேகரிப்பதற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்காக இந்தியதேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் கோரிய அனுமதிக்கு இன்னமும் இலங்கை பதிலளிக்கவில்லை.
முன்னைய ராஜபக்ச அரசாங்கம் அதற்கு இணங்கவேயில்லை,புதிய அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கின்றோம் என தேசிய புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் வடபகுதியில் ஜிகாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதையும்,அவர்களுக்கும் பாக்கிஸ்தானிற்கும் தொடர்புள்ளதையும் இலங்கை கருத்திலெடுக்கவேண்டும், என உள்துறை அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.இந்த விடயத்தினால் இலங்கை தனக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் கொழும்பு இந்தவிடயத்தில் என்ன உதவிகளை செய்யலாம் என்பது தெளிவில்லாமலுள்ளது. மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முகமட் சுலைமானை விசாரிப்பதற்காக இலங்கை செல்வதற்கும் இந்திய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
அவரை இந்தியாவிடம் ஓப்படைக்குமாறு புதுடில்லி விடுத்த வேண்டுகோள்களுக்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை.இந்த விடயத்தில் உறுதியளித்தபடி நடந்துகொள்வது இலங்கையை பொறுத்த விடயம்,எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடபகுதியில் ஜிஹாத் என்பது, மட்டரகமான இனத்துவேச கருத்தாகும். வடமாகாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் புலிகளால் விரட்டபப்ட்டு, 22 வருடங்களுக்கும் மேலாக அகதி வாழ்வு வாழ்ந்து, தற்பொழுதுதான் மிகச் சிறிய எண்ணிக்கையில் மீள்குடியேறி வருகின்றனர். கஞ்சிக்கே வழியில்லாத நிலையில், வெடிகுண்டா?
ReplyDeleteஇது, மீண்டும் முஸ்லிம்களை வடக்கில் இருந்து கருவறுக்கும் ஒரு கருத்தாகும்.
இந்திய உளவுத்துறை ஒரு திறமையற்ற உளவுத்துறை என்பதை மீண்டும் நிருபித்து காட்டுகிறது முட்டாள் தனத்தின் முன்னூதாரணம்
ReplyDelete