டைனோசரும், ரணிலும்
19வதுஅரசியலமைப்பு திருத்த சட்டத்தில் பிரதமருக்கு அதிகமான அதிகாரங்களை பெற்றுக்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சூழ்ச்சி செய்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். தொடர்ந்து அவ்விவாத நிகழ்ச்சியில் பேசிய அவர்,
ரணிலின் இவ்வாறான முயற்சியை தோற்கடிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.ஜனாதிபதியினை ஒரு பொம்மையாக்கும் திருத்த சட்டத்தை கொண்டுவர ரணில் தயாராகி வருகிறார்.
இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக நான் அமைச்சரவையில் கருத்து வெளியிட்ட பின்னர்,பிரதமர் உயர் நீதிமன்றத்திடம் வேறு ஒரு திருத்த சட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.இந்த திருத்த சட்டம் சட்டவிரோதமானது.
அரசியல் அமைப்பு திருத்த சட்டம் ஒன்று ஏழு நாட்களுக்கு முன் வர்த்தமானியில் வெளிடப்பட்டு அதனை மக்களுக்கு அறியத்தரவேண்டும்.
அரசியல் அமைப்பு பற்றி நன்கு அறிந்த திறமைவாய்ந்த சட்டத்தரணியான ரணில்விக்கிரமசிங்க இலங்கையின் முக்கியமான சட்டத்தை மீறியிருக்கிறார்.
இதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதியின் தன்னிச்சையான அதிகாரங்கள் மாத்திரமே நீக்கப்படவேண்டும்.
ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் சமர்ப்பித்த திருத்த சட்டத்திற்கு அமைய பிரதமருக்கு மறைமுகமான அதிகாரங்கள் கிடைக்கின்றன.
ஒரு நாட்டில் இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது. ரணில் கூட்டு அரசியல் இணக்கப்பாட்டை கவனத்தில் கொள்ளாத நடவடிக்கைகளை கையாளுகின்றார்.
இவ்வாறு ரணில் நடந்து கொண்டால் டைனோசர் எவ்வாறு அழிந்ததோ அவ்வாறே ரணிலும் அரசியலில் இருந்து அழிந்து போவார் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு தலைமை முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தால் அது இந்த சம்பிக்கவுக்கு பிடிக்காது .மஹிந்த ஜனாதிபதியாகி ஆரம்ப காலங்களில் அவர் முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கத்தை பேணி வந்தார் இதனால் ஆத்திரமடைந்த சம்பிக்க படிப்படியாக சதி செய்து மகிந்தவை தோல்வி அடைய செய்தார் .தற்போது மைத்திரியும் ,ரணிலும் முஸ்லிம்களுடன் நெருக்கத்தை பேணி வருகின்றார்கள் இதனால் ஆத்திரமடைந்த சம்பிக்க இவர்களுக்கெதிராகவும் தற்போது தனது சதியை ஆரம்பித்து விட்டார் .
ReplyDelete