ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் இடம்பெற்ற, பெற்றோல் + மண்ணெண்ணை செயற்பாடு முடக்கப்பட்டது
சட்டவிரோதமான முறையில் பெற்றோலுடன் மண்ணெண்ணையை கலந்து முன்னெடுக்கப்பட்ட வர்த்தக செயற்பாடு ஒன்கு காவற்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.
ரக்கஹவத்தை - களனி கங்கைக்கு அருகில் இந்த வர்த்தம் இடம்பெற்று வந்துள்ளது.
காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், பாதுகாப்பற்ற வகையில் எந்த விதமான அனுமதியும் இன்றி நடத்திச் செல்லப்பட்ட இந்த வர்த்தகம் சுற்றிவளைக்கப்பட்டது.
அங்கிருந்து 3ஆயிரத்து 300 லீற்றர் பெற்றோல், 200 லீற்றர் டீசல் மற்றும் 2 ஆயிரத்து 200 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது குறித்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் தாங்கிகளின் மூலம் இரகசியமான முறையில் எரிதிரவம் பெறப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த இடத்தில் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை என்பவற்றை கலந்து, பாரிய அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரமே இந்த வணிகம் இடம்பெற்றுள்ளது.
இந்த வர்த்தகத்தை நடத்திவந்தவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.கவும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Post a Comment