Header Ads



'கூண்டுக்குள் எலிகள்' போன்று மூழ்கினார்கள் - உயிர்தப்பியவர்களின் மனதை உருகவைக்கும் அனுபவம்

மத்தியதரைக்கடலில் மூழ்கிய படகில் இருந்த பெரும் பாலான குடியேற்றக்காரர்கள் அடைக்கப்பட்ட நிலையில் சிக்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் 'கூண்டுக்குள் எலிகள்'' போன்று மூழ்கியதாக அந்த படகில் இருந்து உயிர் தப்பிய ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்தியதரைக்கடலில் இடம்பெற்ற மிக மோசமான குடியேற்றப்படகு விபத்து என நம்பப்படும் இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தை தொடர்ந்து சட்டவிரோத குடியேற்ற ஆட்கடத்தல் குறித்து உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத் திற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லிபிய கடற் பகுதியில் மூழ்கிய ஆட்களை ஏற்றிய மீன்பிடிப்படகில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது உறுதியாகவில்லை. இந்த படகில் நூற்றுக்கணக்கானவர்கள் இருந் திருக்கிறார்கள் என்று இத்தாலி கடலோர படையினர் குறிப்பிட்டுள்ளனர். படகில் இருந்து உயிர்தப்பிய பங்களாதேஷ் நாட்டவர் ஒருவர், படகில் 950 பேர் வரை இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னதாக உயிர்தப்பியவர் ஒருவரை மேற்கோள்காட்டி, படகில் 700 பேர் வரை இருந்ததாக செய்தி வெளியாகி இருந்தது.

இதன்படி 900க்கு அதிகமானவர்கள் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனினும் விபத்து இடம்பெற்ற கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 24 சடலங்களையே இத்தாலி கடலோர படையின் படகொன்று இத்தாலியின் சிசிலி தீவுக்கு கொண்டு வந்துள்ளது. விபத்துக்கு பின்னர் கடலில் தத்தளித்த நிலையில் இருந்த வெறும் 24 பேர் மாத்திரமே மீட்கப்பட்டனர்.

உயிர்தப்பியவர்கள் மனதை உருகவைக்கும் அனுபவம் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று மோல்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் தெரிவித்தார்.

இந்த படகில் இருந்து உயிர்தப்பிய 32 வயது பங்களாதேஷ் நாட்டவர் ஒருவர், படகு மூழ்கும்போது அதில் 950 பேர் வரை இருந்தபோதும் மிகக் குறைவான வர்களுக்கே உயிர்பிழைக்க முடிந்தது என்று தெரிவி த்துள்ளார்.

"200 பெண்கள் மற்றும் 50 குழந்தைகள் இந்த படகில் எம்முடன் பயணித்தனர். பெரும்பாலானவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் எலிகள் கூண்டுக்குள் இருப்பது போன்று மரணித்தார்கள்" என்று இத்தாலி பத்திரிகைக்கு அந்த பங்களாதேஷ் நாட்டவர் குறிப்பிட்டுள்ளார். லா சிசிலியா என்ற பத்திரிகைக்கு அவர் மேலும் குறிப்பிடும்போது, "நானும் உயிர்தப்பிய ஏனையவர்களும் படகின் மேற்தளத்தில் இருந்தோம்.

ஏனையவர்கள் மூழ்கினார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் வெளியே வருவதை தடுக்க ஆட்கடத்தல் காரர்கள் இவ்வாறு தடுத்து வைத்திருந்தார்கள். கடைசியில் தமது பயணத்தை கடலுக்கு அடியில் முடித்துவிட்டார்கள்" என்றார்.

படகில் இருந்து உயிர் தப்பியவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஹெலிகொப்டர் மூலம் சிசிலிக்கு அழைத்துவரப்பட்டனர். இந்த பங்களாதேஷ் நாட்டவர் இத்தாலி அரச வழக்கறிஞருக்கு வாக்கு மூலமும் அளித்தார்.

குறைவானவர்கள் உயிர்தப்பியிருப்பதன் மூலம் நூற்றுக்கணக்கானவர்கள் கீழ்ப்பாகத்தில் தடுத்துவைக்கப்பட்டு அதிக எடை காரணமாக படகு மூழ்கியிருப்பது தெளிவாகிறது என்று மீட்பு நடவடிக் கைகளுக்கான படகுகளை அனுப்பும் இத்தாலி கடலோர பொலிஸ் அதிகாரி nஜனரல் அன்டோனினோ இராசோ குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு இத்தாலியின் தீவான லெம் படுசாவுக்கு அருகில் லிபியாவுக்கு சொந்தமான கடற்பகுதியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முன்னதாக கடந்த வாரம் வடக்கு லிபிய கடற் பகுதியில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கியதில் 400 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆபத்தான நிலையில் அந்த படகில் இருந்தவர்கள் அருகால் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலுக்கு சமிக்ஞை காட்ட அனைவரும் முண்டியடித்துக்கொண்டு படகின் ஒரு புறத்துக்கு நகர்ந்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் கூறுகின்றன.

20 மீற்றர் நீளம் கொண்ட இந்த படகு எகிப்தில் இருந்தே பயணத்தை ஆரம்பித்துள்ளது. லிபியாவின் சுவாராஹ் நகருக்கு அருகில் இருக்கும் கடற்கரையில் நிறுத்தப்பட்டு அங்கு மேலும் பலரை ஏற்றிக் கொண்டே ஐரோப்பாவை நோக்கி பயணத்தை தொடர்ந்;துள்ளது. இந்த படகில் அல்ஜPரியா, எகிப்து, நைகர், செனகல், மாலி, சாம்பியா, பங்களாதேஷ் மற்றும் கானா நாட்டவர்கள் அடங்கலாக பல நாடுகளைச் சேர்ந்த வர்களும் இருந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற கடற்பகுதி அதிக ஆழம் கொண்டது என்பதால் உண்மையான பலி எண்ணிக்கை கடைசிவரை மர்மமாகவே இருக்கும் என்று அன்டோ னினோ இராசோ குறிப்பிட்டார். லிபியாவை ஒட்டிய இந்த கடற்பகுதி 5 கிலோமீற்றர் அல்லது அதற்கு மேல் ஆழம் கொண்ட பகுதியாகும்.

இதனிடையே ஆபிரிக்காவில் இருந்து மத்தியதரைக் கடலை கடக்க முற்சிக்கும் புகலிடக்கோரிக்கையாளர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர் மற்றும் உள்துரை அமைச்சர்கள் நேற்று லக்சன்பேர்க்கில் அவசரமாக கூடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் கடற்பகுதியில் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை கடந்த ஓக்டோபரில் கட்டுப்படுத்தி இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவு காரணமாகவே அதிக உயிர்ப்பலிகள் நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த மீட்பு நடவடிக்கையால் கடந்த ஆண்டில் மாத்திரம் 100,000 வரையானவர்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனால் தற்போது ஐரோப்பிய ஒன்றியம் சிறிய கடலோர மீட்பு நடவடிக்கையையே முன்னெடுத்து வருகிறது.

மீட்பு நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பகத் தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஒருசில தெற்கு ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆபிரிக்க நாட்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் ஐரோப்பாவை அடை வதற்கு ஆபத்தான படகுப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் லிபியாவில் போட்டி ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான மோதல் தீவிரம் அடைந் துள்ள நிலையில் லிபியாவின் ஊடே ஐரோப்பாவை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. லிபியாவுக்கு நெருங்கிய தொலைவில் இருக்கும் மோல்டா மற்றும் இத்தாலி கடற்கரைகளுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான அகதிகள் படகுமூலம் தஞ்ச மடைகின்றனர்.

கடந்த ஆண்டில் மாத்திரம் ஆபிரிக்காவில் இருந்த 219,000க்கும் அதிகமாக புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐரோப்பாவை அடைந்துள்ளனர். இதில் கடலைக் கடக்கும்போது ஏற்பட்ட விபத்துகளில் சுமார் 3500 பேர் வரை இறந்திருப்பதாக அகதிகளுக் கான ஐ.நா. நிலையம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.